ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

மிக நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, இந்தியாவில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான ஆஃப்-ரோடு அட்வென்ச்சர் பைக். மற்றும் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பின் சமீபத்திய சிறந்த தயாரிப்பு.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

அட்வென்ச்சர் பயணங்கள் மட்டுமின்றி தொலைத்தூர பயணங்களுக்கும் இந்த மோட்டார்சைக்கிளை தாரளமாக எடுத்து செல்லலாம். இதற்காகவே சவுகரியமான இருக்கை மற்றும் ஹேண்டில்பார் அமைப்பு, 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், குறைவாக 157 கிலோவில் எடை மற்றும் ஆச்சிரியப்படுத்தும் விதமான சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

பைக்கை மிக அதிக வேகத்தில் இயக்கி செல்ல முடியாதுதான், ஏனெனில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் அதிகப்பட்சமாக 17.8 பிஎச்பி மற்றும் 16.45 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

இருப்பினும் இந்த என்ஜினின் உதவியுடன் மணிக்கு 80-ல் இருந்து 90கிமீ வேகத்திற்கு நெடுஞ்சாலைகளில் எந்தவொரு பயமுமின்றி செல்லலாம். அதேநேரம் இவ்வாறு தொலைத்தூர பயணங்களுக்கு எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் செல்ல நினைப்போர் இந்த படங்களில் பார்ப்பவரை போன்று சில ஆக்ஸஸரீகளை பொருத்தி சில மாடிஃபை பணிகளை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

இன்க்ஸ்டா.பாய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த படங்களில் இரவு நேரங்களில் கூடுதல் வெளிச்சத்திற்காக ஹெட்லைட்டிற்கு இரு பக்கத்திலும் துணை விளக்குகள், கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்ட எதிர்காற்று தடுப்பு கண்ணாடிக்கு மேற்புறத்தில் சிறிய நீக்கக்கூடிய கூடுதல் விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவை இந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

அதேபோல் ஹீரோ வழங்கும் க்ராஷ் பாதுகாப்பான் பகுதியில் ஃப்ரேம் ஸ்லைடர்களையும் பார்க்க முடிகிறது. பெட்ரோல் டேங்கின் மீது காந்தகம் மூலம் பை ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. பிறகு, தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் தேவையான, சந்தைக்கு பிறகான பொருட்களை வைக்கும் பின்பக்க கேரியரும் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் லாங் ட்ரிப் செல்லவுள்ளீர்களா? அப்போ இப்படி மாடிஃபை செய்யுங்கள்...

பின்பக்கத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பை எக்ஸாஸ்ட் குழாயில் படாமல் இருக்க நீண்ட கம்பி ஒன்று அந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக பைக்கின் அகலம் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் இந்த பைக்கை நெஞ்சாலைகளில் மட்டுமே இயக்க முடியும். நகர்புற சாலைகளில் இயக்க வாய்ப்பே இல்லை.

Most Read Articles
English summary
Modified Hero Xpulse 200 Looks Ready for Long-Distance Touring
Story first published: Saturday, February 20, 2021, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X