ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

மோட்டோ குஸ்ஸி நிறுவனம் சர்வதேச சந்தையில் அதன் 2021 வி9 ரோமர் மற்றும் வி9 பாப்பர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டோ குஸ்ஸி பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

மோட்டோ குஸ்ஸி வி9 பைக்குகள் பொதுவாகவே அதன் நேர்த்தியான மற்றும் கஸ்டம் மோட்டார்சைக்கிள் போன்றதான தோற்றத்தால் உலகளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமரில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பாகங்களில் கவனிக்கத்தக்க மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் கண்ணீர்த்துளி வடிவத்திலும், கட்டக்கட்டமான டிசைன்களுடன் இருக்கை மற்றும் அகலமான பின்பக்க ஃபெண்டரும் வழங்கப்பட்டுள்ளன.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

இவை எல்லாம் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட வி9 ரோமர் அக்மார்க் மோட்டோ குஸ்ஸி மோட்டார்சைக்கிளாக காட்சி தருகிறது. மோட்டோ குஸ்ஸி வி9 பாப்பர் பெயருக்கு ஏற்றாற்போல் பின்புறம் நறுக்கப்பட்டதாக பாப்பர் மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

பிராண்டின் புதிய இருக்கையை பெற்றுள்ள 2021 வி9 பாப்பர், இதனுடன் அலுமினியத்திலான பக்கவாட்டு பேனல்கள் மற்றும் மட் பாதுகாப்பான்களை புதியதாக பெற்றுள்ளது. இவற்றுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் முழு-எல்இடி லைட் உள்ளிட்டவற்றுடன் 2021 வி9 பாப்பரின் வடிவமைப்பிலும் மோட்டோ குஸ்ஸி நிறுவனம் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

இந்த இரு மோட்டோ குஸ்ஸி வி9 பைக்கிலும் ஒரே மாதிரியான 850சிசி, 90-கோண, வி-ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ குஸ்ஸி வி85 டிடி மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் வி9 பைக்குகளில் அதிகப்பட்சமாக 65 எச்பி மற்றும் 73 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

முந்தைய தலைமுறையில் இருந்து பரிணாம வளர்ச்சியாக 2021 வி9 ரோமர் மற்றும் பாப்பர் மோட்டார்சைக்கிள்களை கொண்டுவந்துள்ளதாக கூறும் மோட்டோ குஸ்ஸி, இந்த பைக்குகளில் கால் பாதம் வைக்கும் பகுதிகளில் சிறந்த பிடிமானத்திற்காக ரப்பரை வழங்கியுள்ளது.

ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்

எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகளாக இந்த மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் மற்றும் ஸ்விட்ச் செய்யக்கூடிய எம்ஜிசிடி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் நிலையாக வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மோட்டோ குஸ்ஸி மோட்டார்சைக்கிள்களை பியாஜியோ க்ரூப் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
2021 Moto Guzzi V9 Roamer and V9 Bobber unveiled
Story first published: Saturday, January 16, 2021, 22:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X