தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ!!

தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்களிடத்தில் இளைஞர் விஷ பாம்பை காட்டி எந்தவொரு நடவடிக்கையும் இன்றி தப்பியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... ஒரு நிமிஷம் ஆடிபோய்டாங்க... வீடியோ!!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவை மிக தீவிரமாக தாக்கி வருகின்றது. இதன்காரணமாக தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வரவில்லை என்றாலும் முழு ஊரடங்கு இல்லாத மாநிலங்களிலும் ஏதாவது ஓர் வழியில் மக்கள் சிலர் வீட்டுக்குள்ளேயே (முழு ஊரடங்கு) முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

அதேசமயம், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் மக்கள் சிலர் உண்மை நிலை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது வெளியில் சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். அவ்வாறு, தேவையில்லாமல் (அத்தியாவசிய தேவை இல்லாமல்) சுற்றி திரிபவர்களை கண்கானிப்பதற்காக காவல்துறை இரவு, பகல் பாராமல் செயல்பட்டு வருகின்றது.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தன்னை மடக்கிய காவலர்களிடத்தில் விஷ பாம்பை காட்டி இளைஞர் ஒருவர் நேக்காக தப்பிச் சென்றிருக்கின்றார். இந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

பொதுவாக, விதிமீறும் வாகன ஓட்டிகள் என்றாலே போலீஸாரிடத்தில் சிக்குகின்ற நேரத்தில் ஏதாவது ஒரு சாக்கு-போக்கை சொல்வர். எப்படியாவது போலீஸிடம் இருந்து, குறிப்பாக, அபராதத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஸ்கூல் பிள்ளைகளைப் போல் விளையாட்டுத் தனமான காரணங்களை எல்லாம் கூறுவர். இருப்பினும், கடைசியில் வாய் வளிக்க பேசியது மட்டுமே அவர்களுக்கு மிஞ்சும். ஆமாங்க, எந்த கருணையும் இன்றி அபராதத்தை போலீஸ் வழங்கிவிடும்.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

இந்த நிலையிலேயே அபராதம் போன்ற எந்தவொரு கடும் நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் ஓர் இளைஞர் தப்பியிருக்கின்றார். அதாவது, தான் வெளியே வந்ததற்கு இந்த விஷ பாம்புதான் என கூறி அவர் தப்பியிருக்கின்றார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம், மைசூரிலேயே அரங்கேறியிருக்கின்றது.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

முழு ஊரடங்கின்போது வெளியில் வந்த அந்த இளைஞரை வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்த மைசூரு நகர போலீஸார் மடக்கியிருக்கின்றனர். அப்போது, "தான் ஓர் பாம்பு பிடிப்பவர் என அறிமுகமான அந்த இளைஞர், வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடிக்கவே வெளியே வந்ததாக" கூறியிருக்கின்றார்.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

இதனை உறுதிப்படுத்துவதற்காக தான் பிடித்துவந்த பாம்பையும் அவர் போலீஸிடத்தில் காண்பித்தார். ஓர் பிளாஸ்ட்டிக் பாட்டிலுக்குள் அப்பாம்பை அவர் கையோடு எடுத்து வந்திருந்தார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. குறிப்பாக, இளைஞர் வெளியில் வந்ததற்கான காரணம் பலரை அதிர வைக்கும் அமைந்துள்ளது.

தடுத்து நிறுத்திய போலீஸ்... விஷ பாம்பை காட்டி தப்பிய இளைஞர்... வீடியோ!

எந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் வன விலங்குகளைக் காப்பதும் ஓர் அத்தியாவசி பணி என்பதை இளைஞரின் செயல் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகையால், எந்தவொரு அபராதமும் இன்றி காவலர்கள் அந்த இளைஞரை அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் தான் பிடித்த விஷ பாம்பை பைக்கின் பெட்ரோல் டேங்கின்மீது வைத்தவாறு மீண்டும் அவரது பயணத்தைத் தொடர்ந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் காவல்துறை மிகக் கண்டிப்பான முறையில் செயல்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி வருபவர்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வாகனங்களை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற மிகக் கடுமையான நடவடிக்கைகள் வாகன ஓட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mysore Youngster Shows Cobra For Escaping From Cops Action. Read In Tamil.
Story first published: Thursday, May 13, 2021, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X