2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

2021 எக்ஸ்டயவெல் பைக்கை இந்தியாவில் ரூ.18 லட்சம் என்கிற விலையில் டுகாட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு புதிய டுகாட்டி பைக்காக மல்டிஸ்ட்ராடா வி4 அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ்டயவெல் ரூ.18 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

இந்த புதிய டுகாட்டி மோட்டார்சைக்கிள் முதன்முறையாக கடந்த ஆண்டு இறுதியில், நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. யுரோ-5/ பிஎஸ்6 -க்கு இணக்கமானதாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய எக்ஸ்டயவெல், விற்பனையில் இருக்கும் 2021 டயவெல்லின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

டார்க் & ப்ளாக் ஸ்டார் என்கிற இரு விதமான வேரியண்ட்களில் புதிய எக்ஸ்டயவெல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டார்க் வேரியண்ட்டின் விலை தான் ரூ.18 லட்சம் ஆகும். கருப்பு வேரியண்ட்டின் விலை ரூ.22.60 லட்சம். இந்த இரு வேரியண்ட்களும் பெயருக்கு ஏற்றாற்போல் கருப்பு நிறத்தில் தான் வடிவமைக்கப்படுகின்றன.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

ஆனால் ஒன்று பளபளப்பானதாகவும், மற்றொன்று மேட் ஷேடிலும் உள்ளன. ப்ளாக் ஸ்டார் வேரியண்ட் மட்டும் கூடுதலாக பெட்ரோல் டேங்கில் சிவப்பு நிறத்தில் வளையத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த வேரியண்ட் மட்டும் மெஷின் அலாய் சக்கரங்களையும், மெல்லிய தோலில் இருக்கையையும், ப்ரெம்போ எம்50 காலிபர்களையும் பெற்று வந்துள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

டுகாட்டி டயவெல் மோட்டார்சைக்கிளில் யுரோ 5/ பிஎஸ்6 இணக்கமான டெஸ்டாஸ்டிரெட்டா டிவிடி 1,262சிசி எல்-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்-இல் 158 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 130 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

முந்தைய எக்ஸ்டயவெல் மாடல் உடன் ஒப்பிடுகையில் இது 8 பிஎச்பி மற்றும் 2 என்எம் டார்க் திறன் அதிகமாகும். ஆனால் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மாற்றம் இல்லை, வழக்கமான 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் தொடரப்பட்டுள்ளது. ஆனால் எக்ஸாஸ்ட் குழாயின் வடிவம் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

ஹேண்டில்பார் ஒற்றை துண்டாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்விங்கார்ம் ஒற்றை பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பிராண்டின் டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டமும் புதிய எக்ஸ்டயவெலில் வழங்கப்பட்டுள்ளது. ரைடிங் மோட்களாக ஸ்போர்ட், டூரிங், அர்பன் என்பவை உள்ளன.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

இந்த டுகாட்டி பைக்கின் முன் சக்கரத்தில் 120/70 இசட்ஆர்17 என்ற அளவிலும், பின் சக்கரத்தில் 240/45 இசட்ஆர்17 என்ற அளவிலும் பைரெல்லி டயப்லோ ரோஸ்ஸோ-3 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் 17 இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைன் வேரியண்ட்களை பொறுத்து வேறுபடுகின்றன. எக்ஸ்டயவெல்லின் இரு வேரியண்ட்களின் எடை ஒரே மாதிரியாக 247 கிலோவாக உள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 50மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க ப்ரெம்போ எம்50 4-பிஸ்டன் காலிபர்களுடன் 320மிமீ இரட்டை டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரெம்போ 2-பிஸ்டன் சுழலும் காலிபர் உடன் 265மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

இவற்றுடன் வழக்கமான தொழிற்நுட்ப அம்சங்களையும் 2021 எக்ஸ்டயவெல் பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரானிக் பாகங்களில் அப்டேட் செய்யப்பட்ட போஸ்ச்-ப்ரெம்போ ஏபிஎஸ், போஸ்ச் செயலற்ற அளவீடு (IMU), 9.1 எம்பி கார்னரிங் ப்ரேக்கிங் அமைப்பு, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எல்இடி விளக்குகள், 3.5 இன்ச் டிஎஃப்டி திரை உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

இவற்றுடன் ஸ்லிப்-உதவி க்ளட்ச் மற்றும் ரைடு-பை-வயர் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்ட ஓட்டுனர் உதவி எலக்ட்ரானிக் தொகுப்பாக இந்த டுகாட்டி பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்டயவெல் பைக்கிற்கு 24 மாத/ முடிவிலா மைலேஜ் உத்தரவாதத்தை டுகாட்டி நிறுவனம் வழங்கியுள்ளது.

2021 டுகாட்டி எக்ஸ்டயவெல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.18 லட்சம்

பராமரிப்பிற்கான சேவை இடைவெளியாக 15,000 கிமீ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள்களை டுகாட்டி களமிறக்கி வருகிறது. இந்த வரிசையில் தான் 2021 எக்ஸ்டயவெல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2021 Ducati XDiavel Launched In India At Rs 18 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X