இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

அட்டகாசமான கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில் காட்சிதரும் புதிய ஜாவா 42 பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

மொத்த ஜாவா பைக்குகளின் விற்பனையில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் 50,000 என்ற மைல்கல்லை கடந்ததுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டில் ஊரடங்கு உத்தரவுகள் கொண்டுவரப்படவில்லை எனில், இந்த மைல்கல்லை எப்போதோ அடைந்திருப்போம் என இந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

ஏனெனில் ஜாவா பைக்குகளுக்கு எப்போதுமே தேவை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் 42 பைக்கில் வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு என்ற புதிய நிறத்தேர்வுகளை வழங்க கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்லேன் செய்திதளம் மூலம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தோமேயானால், புதிய நிறத்தில் ஜாவா 42 பைக்கை தயாரிப்பு நிறுவனம் முழுவதும் வடிவமைத்துவிட்டது என்பது போல தான் தெரிகிறது.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

இதனால் புதிய 42 பைக்கின் தயாரிப்பு பணிகள் தற்சமயம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும். புதிய நிறங்கள் மட்டுமின்றி வேறு சில அப்கிரேட்களையும் ஜாவா 42 பைக்கில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் கொண்டுவரவுள்ளது நமக்கு ஏற்கனவே தெரியும்.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

இதன்படி வயர் ஸ்போக் சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்களை இந்த பைக் ஏற்றுள்ளது. அதேபோல் க்ரோம் பாகங்கள் அனைத்தும் தற்போதைய மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக கருப்பு நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

புதிய நிறங்களுடன் 42 பைக் தற்போதைய நிறங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளில் வழங்கப்படும் 293சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது.

இந்த மாதிரியான தோற்றத்தில் வருகிறதா புதிய ஜாவா 42 பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் கூட தோற்றுவிடும்!

அதிகப்பட்சமாக 26.51 பிஎச்பி மற்றும் 27.05 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சமீபத்திய விலை அதிகரிப்புக்கு பின்னர் ஜாவா 42 பைக்கின் தற்போதைய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.63 லட்சமாக உள்ளது. புதிய நிறம் மற்றும் அப்கிரேட்களினால் இதன் விலை மீண்டும் ரூ.10,000 அளவில் அதிகரிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa 42 In New Colours Of Black, White, Red Launch Soon, Production Start.
Story first published: Friday, February 12, 2021, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X