சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

அறிமுகத்திற்கு முன்னதாக புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும் இந்த புதிய அப்ரில்லா ஸ்கூட்டர் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

இந்திய சந்தையில் அப்ரில்லா ஸ்கூட்டர்களை பியாஜியோ க்ரூப் நிர்வகித்து வருகிறது. இணையத்தள பக்கத்தில் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தனது அறிக்கையின் மூலம் பியாஜியோ நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. டீலர்ஷிப் ஷோரூம்களை ஏற்கனவே வந்தடைய துவங்கிவிட்ட அப்ரில்லா எஸ்ஆர்160 விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

இதற்கிடையில் சமீபத்தில் இந்த ஸ்கூட்டரை பற்றிய படங்கள் இணையத்தில் கசிந்திருந்தன. அவற்றின் மூலம் எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முன்பக்கத்தை பார்க்க முடிந்தது. இந்த புதிய அப்ரில்லா ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் ஹலோஜன் யூனிட்டிற்கு மாற்றாக எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

புதிய ஹெட்லைட் உடன் கூர்மையான தோற்றத்தில் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அப்ரில்லா எஸ்ஆர்160 வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரிலும் முக்கியமான அப்டேட் வழங்கப்பட உள்ளது. ஆனால் என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

எங்களுக்கு தெரிந்தவரையில், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் எஸ்ஆர்160 அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம். டீலர்ஷிப் வளாகத்தில் இருந்து வெளியாகி இருந்த இந்த அப்ரில்லா ஸ்கூட்டரின் படங்களில் மூன்று விதமான நிறத்தேர்வுகளில் ஸ்கூட்டர் காட்சியளித்து இருந்தது. இதன்படி பார்க்கும்போது வெள்ளை, கருப்பு மற்றும் ரேஸ் எடிசன் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட நிறங்களில் எஸ்ஆர்160 விற்பனை செய்யப்பட உள்ளது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

மற்றப்படி இயந்திர பாகங்களில் பெரியதாக எந்த அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் புதிய எஸ்ஆர்160 ஸ்கூட்டரிலும் வழக்கமான, பிஎஸ்6க்கு இணக்கமான 160.03சிசிம் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே பொருத்தப்படும். அதிகப்பட்சமாக 10.84 பிஎச்பி மற்றும் 11.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

முந்தைய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் விலை ரூ.1.08 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனை காட்டிலும் புதிய மாடலின் விலை நிச்சயமாக அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இந்த செய்தியில் நாங்கள் பதிவிட்டுள்ள படங்களில் இருப்பது முந்தைய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் படங்களாகும். அப்டேட் செய்யப்பட்ட எஸ்ஆர்160 தோற்றத்தில் இதனை காட்டிலும் சற்று வேறுப்படக்கூடும்.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

இந்த ஸ்கூட்டரின் இந்திய அறிமுகத்தை அப்ரில்லா பிராண்ட் சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர்த்து, இந்த ஸ்கூட்டரின் அறிமுக தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. முன்பக்கத்தில் புதுமையான வடிவில் இரு பக்கங்களிலும் எல்இடி டிஆர்எல்களுடன் முழு-எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பை ஏற்றிவரும் இதன் இருக்கைகளும் பிளவுப்பட்ட வடிவில் வழங்கப்படும் என தெரிகிறது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

அதேபோல் பின்பக்க முனை பகுதியில் பின் இருக்கை பயணி பிடித்து கொள்ள கம்பி இம்முறை நன்கு பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ள ப்ளூடூத் இணைப்பு பெற்ற இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆனது அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்160 ஸ்கூட்டரில் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

புதிய எஸ்ஆர்160 ஸ்கூட்டருடன் அப்டேட் செய்யப்பட்ட எஸ்ஆர்125 ஸ்கூட்டரையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த பியாஜியோ க்ரூப் திட்டமிட்டுள்ளது. அப்ரில்லா பிராண்டில் இருந்து கடைசியாக இந்திய சந்தையில் அப்டேட் செய்யப்பட்ட ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ 660 மோட்டார்சைக்கிள்கள் நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

கடந்த 2021 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 2021 அப்ரில்லா பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் தான் துவங்கின. இதில் டுவோனோ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.09 லட்சமாகவும், ஆர்எஸ்660 பைக்கின் விலை ரூ.13.39 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

தோற்றத்தில் சற்று மாறுப்படும் ஆர்எஸ்660 மற்றும் டுவோனோ 660 பைக்குகளில் ஒரே மாதிரியான 659சிசி, இணையான-இரட்டை, லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 10,500 ஆர்பிஎம்-ஒல் 100 பிஎச்பி மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 67 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சூப்பரு... இந்த அப்ரில்லா ஸ்கூட்டருக்கு புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!! அறிமுகம் விரைவில்!

இந்த புதிய மோட்டார்சைக்கிள்களினால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அப்ரில்லா பைக்குகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மற்ற இரு அப்ரில்லா பைக்குகளாக டுவோனோ வி4 மற்றும் ஆர்எஸ் வி4 உள்ளிட்டவை முறையே ரூ.20.66 லட்சம் மற்றும் ரூ.23.69 லட்சம் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
New Aprilia SR 160 pre-bookings open ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X