Just In
- 1 hr ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 8 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 10 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 13 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிஎஃப் மோட்டோவின் 300எஸ்ஆர் பைக்கின் அறிமுகம் எப்போது? ஆர்சி390 & நிஞ்சா 300 பைக்கிற்கு சரியான போட்டி மாடல்
கேடிஎம் ஆர்சி390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 300 பைக்குகளுக்கு போட்டியாக இந்தியா வரவுள்ள சிஎஃப் மோட்டோ 300எஸ்ஆர் பைக்கின் அறிமுகம் குறித்த தகவல்கள் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020ல் இந்தியாவில் வருகை தருவதாக இருந்த சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ பிராண்ட் கொரோனா வைரஸ் பரவலினால் அதன் முதல் பைக்காக 300என்கே நாக்டு ஸ்ட்ரீட் ஃபைட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ அறிவித்தது.

அதேநேரம் இந்த நாக்டு மோட்டார்சைக்கிள் உடன் அதன் ஸ்போர்ட்ஸ் உடன்பிறப்பான 300எஸ்ஆர் மோட்டார்சைக்கிளையும் இந்த வருட இறுதியில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகேடி முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படும் இந்த சீன ஸ்போர்ஸ் பைக்கின் விலை கேடிஎம் ஆர்சி390 மற்றும் நிஞ்சா 300 பைக்குகளுக்கு போட்டியாக ரூ.2.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இதன் நாக்டு வெர்சனான 300என்கே பைக்கின் விலையை காட்டிலும் ரூ.20,000 அளவில் அதிகமாகும். கேடிஎம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டுவரும் சிஎஃப் மோட்டோவின் 300 எஸ்ஆர் பைக்கை கேடிஎம் ட்யூக் பைக்குகளின் தோற்றத்தை வடிவமைத்த கிஸ்கா (KISKA) என்ற அமைப்பு வடிவமைத்துள்ளது.

கேடிஎம் ஆர்சி பைக்குகளை போன்று ஸ்போர்டியான மற்றும் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான தோற்றத்தினால் 300 எஸ்ஆர் பைக்கும் சாலையில் செல்லும் எவர் ஒருவரையும் திரும்பி பார்க்க வைக்கக்கூடியது.

முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்களை கொண்டுள்ள 300 எஸ்ஆர் பைக்கில் படிக்கட்டு போன்றதான இருக்கை அமைப்பு, பருத்த பெட்ரோல் டேங்க், தாழ்வான கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய 'CF MOTO' எழுத்துகளுடன் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

இவற்றுடன் டிஎஃப்டி வண்ண திரையை பெறும் இந்த சீன பைக்கின் மொத்த எடை 165 கிலோ மற்றும் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 12 லிட்டர்கள் ஆகும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த பைக்கில் 292.4சிசி லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 8750 ஆர்பிஎம்-ல் 34 பிஎச்பி மற்றும் 7250 ஆர்பிஎம்-ல் 20.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. வழக்கமான டிஸ்க் ப்ரேக்குகளுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்யுல்-சேனல் ஏபிஎஸ் இந்த சிஎஃப் மோட்டோ பைக்கில் வழங்கப்படுகிறது.