மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது, கடந்த காலங்களில் பலமுறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இந்த சோதனை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

ஏனெனில் 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்து காடிவாடி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்பை படங்கள் தமிழகத்தின் வால்பாறை மலை பகுதியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்பை படங்களில் மூன்று புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

இந்த மூன்று மோட்டார்சைக்கிள்களும் பின் பகுதியில் இருந்துதான் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பைக்குகளின் பின் பகுதியை மட்டும்தான் காண முடிகிறது. ஆனால் அதனால் ஒன்றும் பிரச்னை இல்லை. ஏனெனில் இதற்கு முன்பு வெளியான ஸ்பை படங்களின் மூலம் 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் முன் பகுதி எப்படி இருக்கும்? என்பதை நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்துள்ளது.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

எனினும் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களை கூர்ந்து உற்று நோக்கும்போது, நடுவில் உள்ள மோட்டார்சைக்கிள் க்ரோம் எக்ஸாஸ்ட்டையும், மற்ற இரண்டு மோட்டார்சைக்கிள்களும் மேட் பிளாக் எக்ஸாஸ்ட்டையும் பெற்றுள்ளது போல தெரிகிறது. இதில், தயாரிப்பு நிலை மாடலில் இடம்பெறப்போவது எது? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

அனேகமாக தயாரிப்பு நிலை மாடலில் க்ரோம் எக்ஸாஸ்ட் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. அதற்காக மேட் பிளாக் எக்ஸாஸ்ட் வழங்கப்படாது என கூறி விட முடியாது. இந்த இரண்டு எக்ஸாஸ்ட்களையுமே ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கி, வெவ்வேறு வேரியண்ட்களில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் தோற்றம் தற்போது உள்ள மாடலை போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள 349 சிசி இன்ஜின் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் இந்த இன்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் ட்யூனிங் செய்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...

இதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்தபடியாக புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மூலம் போட்டி அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
New-Gen Royal Enfield Classic 350 Spied Once Again - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X