ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

பிரம்மாண்ட க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் மூலமாக உலக அளவில் வாடிக்கையாளர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முதல் அட்வென்ச்சர் ரக பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அட்வென்ச்சர் வகை பைக் மாடலின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அட்வென்ச்சர் பைக் மாடலானது பான் அமெரிக்கா 1250 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலானது பான் அமெரிக்கா 1250 மற்றும் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இதன் முகப்பு அமைப்பு மிகவும் விசித்திரமாக வடிவமைக்கப்பட்டு இருப்பது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. எனினும், சாகசப் பிரியர்களுக்கு இந்த விசித்திர தோற்றம் கவரும் என்று நம்பலாம். இந்த ஹெட்லைட்டுடன் பெரிய விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

வலிமையான பெட்ரோல் டேங்க், வி ட்வின் எஞ்சின் வடிவமைப்பு, பின்புறத்தில் மேல் நோக்கி முடியும் சைலென்ச்ர ஆகியவை இந்த பைக்கிற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கில் 1,252சிசி வி- ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 127 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய பான் அமெரிக்கா 1250 பைக்கானது அலாய் ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் மற்றும் காஸ்ட் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் இணைக்கப்பட்ட சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 47 மிமீ பிஎஃப்எஃப் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்ப்டடுள்ளன. இந்த இரண்டு சஸ்பென்ஷன்களும் 191 மிமீ வரை டிராவல் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த பைக்கில் முன்புறத்தில் இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் மற்றும் பிரெம்போ 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர்கள் மற்றஉம் 280 மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளன. முன்புறத்தில் 19 அங்குல அலாய் சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல அலாய் சக்கரமும் உள்ளன. மிச்செலின் ஸ்கார்ச்சர் அட்வென்ச்சர் ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த பைக்கில் 6.8 அங்குல டிஎஃப்டி தொடுதிரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதியுடன் ஓட்டுபவரின் ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கலாம்.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஐஎம்யூ யூனிட் தரவுகளின் அடிப்படையில் செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், டிராக் டார்க் ஸ்லிப் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. ரோடு, ஸ்போர்ட், ரெயின், ஆஃப்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பிளஸ் என 5 விதமான ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் மாடலில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் பிரேக் பெடல், அலுமினியம் ஸ்கிட் பிளேட், செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் டேம்பர், அடாப்டிவ் ரைடு ஹைட் அட்ஜெஸ்ட் வசதி, ஸ்போக்ஸ் சக்கரங்கள் ஆகியவற்றுடன் வேறுபடுகின்றது.

ஹார்லி டேவிடன்சன் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 மோட்டார்சைக்கிள் 14,000 பவுண்ட் விலையிலும் (இந்திய மதிப்பில் ரூ.14.27 லட்சம்), பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் மாடலுக்கு 15,500 பவுண்ட் விலையிலும் (இந்திய மதிப்பில் ரூ.15.80 லட்சம்) இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பைக் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஆர் 1250 பைக்கிற்கு நேர் போட்டியாக இருக்கிறது.

Most Read Articles
--
English summary
Harley-Davidson has revealed all new Pan America 1250 adventure bike globally.
Story first published: Wednesday, February 24, 2021, 11:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X