புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

புதிய ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு முன்னதாக, அதன் டீசர் வீடியோ ஒன்று புதியதாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

வருட இறுதி பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதை அடுத்து, இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதன் புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

இந்த தயாரிப்புகளில் எக்ஸ்பல்ஸ் 200 4வி, பிளஷர்+ எக்ஸ்டெக் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 4வி உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த நிலையில் தான் தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகத்திற்கு முன்னதாக பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டரின் புதிய டீசர் வீடியோவினை அதன் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளது.

ஸ்கூட்டரின் புதிய ஹெட்லேம்ப்பை காட்டுவதில் இருந்து துவங்கும் இந்த டீசர் வீடியோவில், பிறகு புதிய பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டரின் ஒவ்வொரு பாகங்களையும் நெருக்கமாக காட்டியுள்ளனர். மற்றப்படி வெறும் 11 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஸ்கூட்டரை பற்றி வேறெந்த விபரமும் வெளியிடவில்லை.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

இவ்வளவு ஏன், ஸ்கூட்டரின் பெயர் கூட வீடியோவில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ‘கிளாசியரை பற்றியது' என்கிற தலைப்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய சர்ப்ரைஸை வழங்க ஹீரோ மோட்டோகார்ப் விரும்புவது தெரிய வருகிறது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

கவர்ச்சிகரமான மஞ்சள் நிறத்தில் வீடியோவில் புதிய பிளஷர்+ எக்ஸ்டெக் ஸ்கூட்டர் காட்சியளிப்பதை இந்த இடத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும். பிளஷர்+ எக்ஸ்டெக் உடன் புதிய ஸ்கூட்டராக தற்போதைய மேஸ்ட்ரோ எட்ஜ்125-இன் அப்டேட் வெர்சனையும் அறிமுகப்படுத்த ஹீரோ தயாராகி வருகிறது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

அப்டேட் செய்யப்படும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் ஹீரோ நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே உருவாக்கப்படும் டெலேமேட்டிக்ஸ் ஹீரோ கனெக்ட் வசதி வழங்கப்பட உள்ளது. மேஸ்ட்ரோ எட்ஜ் உடன் மேற்கூறப்பட்ட, ஹீரோ பிராண்டில் இருந்து அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் வாகனங்களிலும் வழங்கப்படலாம்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

ஹீரோ கனெக்ட்டின் மூலம் வாகனத்தின் கடைசி இருப்பிடம், ஆன்போர்டு நாவிகேஷன், பயண பகுப்பாய்வு, வாகனம் விபத்தில் கவிழ்ந்ததை எச்சரிக்கும் வசதி, வாகனம் இயங்கும் பாதையை நேரலையாக பின் தொடர்வது, அதிவேக எச்சரிப்பான், ஜியோ-ஃபென்சிங் உள்ளிட்ட ஸ்மார்ட்டான வசதிகள் ஏகப்பட்டவைகளை பெற முடியும்.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

இந்த வசதி உரிமையாளர் தனது வாகனத்தை ட்ராக் செய்வதற்கும், உரிமையாளர் அனுபவத்தை எளிதாக அனுபவிப்பதற்கும் உதவியாக இருக்கிறது. ஹீரோ கனெக்ட் தற்சமயம் ஹீரோ மோட்டோகார்பின் டெஸ்டினி 125, பிளஷர்+, பிளஷர்+ பிளாட்டினம் எடிசன், எக்ஸ்பல்ஸ்200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் உள்ளிட்ட மாடல்களில் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீயாக ரூ.4,999 என்கிற விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

இத்தகைய வசதி தான் அப்டேட் செய்யப்படும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டருக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், மேஸ்ட்ரோ எட்ஜ்125 ஸ்கூட்டரின் நீளம் 1,843மிமீ ஆகவும், அகலம் 718மிமீ ஆகவும், உயரம் 1,139மிமீ ஆகவும் உள்ளன. முன் & பின் சக்கரங்களை 1,261மிமீ இடைவெளியில் கொண்டுள்ள இந்த 125சிசி ஹீரோ ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 155மிமீ அளவில் உள்ளது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

கிட்டத்தட்ட 111 கிலோ எடை கொண்டதாக உள்ள ஹீரோ மேஸ்ட்ரோவின் பெட்ரோல் டேங்க் 5 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகின்றது. இவற்றுடன் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பெற ஏகப்பட்ட நிறத்தேர்வுகளை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இதன் 124.6சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 9 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புத்துணர்ச்சியான தோற்றத்தில் ஹீரோவின் பிளஷர்+ எக்ஸ்டெக் - டீசர் வெளியீடு!! அறிமுகம் விரைவில்

என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலை சிவிடி கியர்பாக்ஸ் மூலமாக ஸ்கூட்டர் பெறுகின்றது. சஸ்பென்ஷனிற்கு மேஸ்ட்ரோ எட்ஜ்125-இல் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. அதேநேரம் கூடுதல் தேர்வாக முன் சக்கரத்திற்கு டிஸ்க் ப்ரேக்கையும் பெறலாம். இந்த பிரேக்கிங் சிஸ்டம் ஹீரோவின் ஒருங்கிணைக்கப்பட்ட ப்ரேக் சிஸ்டத்துடன் பொருத்தப்படுகிறது.

Most Read Articles
English summary
New Hero Pleasure Plus XTEC, Maestro Launch Soon – First Official Teaser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X