புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வமாக உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தோனிஷியாவில் நடைபெற்றுவரும் 2021 கைகிண்டோ இந்தோனிஷியா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் பல கவர்ச்சிகரமான மாடர்ன் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஹோண்டா சிபி150எக்ஸ் பைக்கும் ஒன்றாகும். இதுதான் ஹோண்டாவின் முதல் 150சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அதுமட்டுமின்றி இந்த ஜப்பானிய சிபிஎக்ஸ் மோட்டார்சைக்கிள்கள் வரிசையில், இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிபி200எக்ஸ் பைக்கிற்கும் கீழ், சிறிய அளவிலான ஹோண்டா சிபிஎக்ஸ் பைக்காக புதிய சிபி150எக்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சிபி200எக்ஸ் பைக்கை போன்று, தற்போது இந்தோனிஷியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ள சிபி150எக்ஸ் பைக்கும் அதன் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் வெர்சனான சிபி150ஆர்-இன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் புதிய சிபி150எக்ஸ் முன்பக்கத்தில் குறைவான பேனல்களுடன் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றதாகவும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தியாவின் சிபி200எக்ஸ் பைக்கை போன்று, சிபி150எக்ஸ் பைக்கிலும் ஆஃப்-ரோட்டிற்கென பிரத்யேகமான இயந்திர பாகங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹோண்டா அட்வென்ச்சர் பைக்குகளின் வழக்கமான எக்ஸ் லைன் டிசைன் மொழியில் தான் இந்த புதிய மாடலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதனால் கொக்கு போன்றதான முன்பக்கத்தை அப்படியே பெற்றுள்ள இந்த பைக், நீட்டிப்புகளுடன் பருமனான பெட்ரோல் பகுதி மற்றும் அளவில் சிறிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உள்ளிட்டவற்றையும் பெற்று வந்துள்ளது. என்ஜின் அமைப்பை பாதுகாக்க சிபி150எக்ஸ் பைக்கிலும் பேஷ் தட்டினை ஹோண்டா பொருத்தியுள்ளது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இதனுடன் பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகளினால் பைக்கின் ரேடியேட்டரும் பாதுகாக்கப்படும். நேரான ஹேண்டில்பார் உடன் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் ஓட்டுனருக்கு சவுகரியமான பயணத்தை வழங்கும். சிபி150எக்ஸ்-இன் மற்ற ஸ்டைலிங் அம்சங்களாக ஒற்றை-துண்டு இருக்கை, ராக்டு-அப் பின்பகுதி, மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இவை தவிர்த்த மற்ற விபரங்கள் எதையும் ஹோண்டா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் எங்களுக்கு தெரிந்தவரையில் 149சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அப்படியே சிபி150ஆர் பைக்கில் இருந்து பெறப்பட்டிருக்கும். அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-இல் 16.5 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-இல் 13.8 என்எம் டார்க் திறனை சிபி150ஆர் பைக்கில் இந்த என்ஜின் வெளிப்படுத்துகிறது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய சிபி150எக்ஸ் பைக்கிலும் இதே அளவிலான ஆற்றலையே வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். தொலைத்தூர பயணங்களுக்காக பிஎச்பி-யில் சற்று மாற்றம் கொண்டுவரப்படலாம். இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனையில் உள்ள சிபி200எக்ஸ் பைக்கானது வழக்கமான டைமண்ட்-வகை ஃப்ரேமின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சிபி200எக்ஸ் பைக்கில் சஸ்பென்ஷனிற்கு 37மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், 150மிமீ டிராவல் உடன் மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க இரு சக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் ப்ரேக்குகள், கூடுதல் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் உடன் பொருத்தப்படுகின்றன.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய சிபி150எக்ஸ் பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 181மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளது. இது சிபி200எக்ஸ்-ஐ காட்டிலும் 14மிமீ அதிகமாகும். ஆனால் தரையில் இருந்து ஓட்டுனர் இருக்கையின் உயரமானது சிபி200எக்ஸ்-இல் (817மிமீ), சிபி150எக்ஸ்-ஐ (805மிமீ) காட்டிலும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. சிபி150ஆர் பைக்கில் வழங்கப்படுகின்ற அதே 17-இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் தான் இந்த பைக்கிலும் தொடரப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தோனிஷியாவில் சிபி150எக்ஸ் பைக்கின் விலை 32 மில்லியன் ஆர்பி-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.67 லட்சமாகும். அதிகப்பட்சமாக 35 மில்லியன் ஆர்பி (ரூ.1.83 லட்சம்) வரையில் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிபி200எக்ஸ்-ஐ காட்டிலும் ரூ.20,000- 25,000 வரையில் அதிகமாகும்.

புதிய ஹோண்டா சிபி150எக்ஸ் அட்வென்ச்சர் பைக் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தியாவில் புதிய சிபி150எக்ஸ் பைக்கினை ஹோண்டா அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் நம் நாட்டில் ஏற்கனவே சிபி200எக்ஸ் விற்பனையில் உள்ளது. சிபி200எக்ஸ் பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.44 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

ஹார்னெட் 2.0 பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிபி200எக்ஸ்-இன் டிசைன் அட்வென்ச்சர் பைக் பிரியர்களை கவரும் விதத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Most Read Articles
English summary
New Honda CB150X 150cc Adventure Motorcycle Makes Global Debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X