மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் க்ரோம் 125சிசி மினி பைக்கின் பெயரை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான காப்புரிமை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

ஹோண்டா நிறுவனம் பல வருடங்களாக க்ரோம் என்ற பெயரில் மினி பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதுவரை நம் நாட்டு சந்தையில் இந்த பைக்குகள் அறிமுகமாகவில்லை.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

சில வருடங்களுக்கு முன்பு நவி என்ற பெயரில் ஸ்கூட்டர்-ஸ்டைல் மினி பைக் மட்டுமே ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருந்தது. இந்த நிலையில் தற்போது க்ரோம் 125சிசி மினி பைக்கின் காப்புரிமை படம் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளன.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

இருப்பினும் ஹோண்டாவின் எதிர்கால மாடல்களை வைத்து பார்க்கும்போது க்ரோம் பிராண்ட் இந்தியாவில் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. இதனால் நவி மினி பைக்குகள்தான் மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படலாம்.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

ஹோண்டா நவி இந்தியாவில் 2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் முதன்முதலாக அறிமுகமானது. ஆரம்பத்தில் அதன் தோற்றத்தினால் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றாலும், பிறகு விற்பனை குறையவே ஹோண்டா நிறுவனம் நவியின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியிருந்தது.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

இருப்பினும் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்காக இந்திய தொழிற்சாலையில் நவி மினி பைக்குகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. 18 வயதில் இருந்து 25 வயதிற்குள்ளான இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்ட நவியில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் 110சிசி என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டது.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

ஆனால் தற்போது கிடைத்துள்ள காப்புரிமை படத்தில் காட்சிதருவது 125சிசி என்ஜினை கொண்ட மினி பைக் என தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் வழங்கும் 124சிசி என்ஜின் உடன் நவி மினி பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா ஹோண்டா நவி மினி பைக்?! மறுபடியும் ரிஸ்க் எடுக்கும் ஹோண்டா!

பிஎஸ்6 தரத்தில் இந்த 124சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 8.2 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-ல் 10.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஹோண்டா இவ்வாறு பல தயாரிப்புகளின் காப்புரிமைகளை பதிவு செய்துள்ளது. ஆனால் அவற்றில் சில தயாரிப்புகள் மட்டும்தான் தயாரிப்பு பணிகளில் உட்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Honda Grom 125cc Patented In India – More Powerful Navi Planned?
Story first published: Friday, January 15, 2021, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X