யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இந்தியா வரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு போட்டியாக 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150 ஸ்கூட்டர் சில சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

ஜப்பான் உள்ளிட்ட சில வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமான ஹோண்டா ஸ்கூட்டராக விளங்கும் சுப்ரா ஜிடிஆர்150-க்கு வருடந்தோறும் அப்டேட்கள் வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக, வியட்நாம் மார்க்கெட்டில் மிக பிரபலமான 2-வீலராக வின்னர் எக்ஸ் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த ஹோண்டா ஸ்கூட்டருக்கு 2022ஆம் ஆண்டிற்காக சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இதன்படி 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150 ஸ்கூட்டர் மிகவும் ஸ்போர்டியரான முன்பக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் புதியதாக பொருத்தப்பட்டுள்ள இரட்டை முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப்கள் ஸ்போர்ட்பைக்கில் வழங்கப்படுவதை போன்றதான தோற்றத்தில் உள்ளன. இதனுடன் டைனாமிக் ரைடிங் பொசிஷனை வழங்கும் விதத்தில் அளவில் பெரிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இந்த காஸ்மெட்டிக் மாற்றங்களை தவிர்த்து, இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. சுப்ரா ஜிடிஆர்150 ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், யுஎஸ்பி சார்ஜிங் துளை மற்றும் நீல நிற பேக்லிட் உடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

இயக்க ஆற்றலை வழங்க 150சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகின்றது. அதிகப்பட்சமாக 15.4 பிஎச்பி மற்றும் 13.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் அளவில் பெரிய 17-இன்ச் அலாய் சக்கரங்களில் சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் பொருத்தப்பட்டுள்ளன.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

பிரேக்கிங் பணியினை கவனிக்க சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் இரு சக்கரங்களிலும் டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளை தொடர்ந்து இந்த ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150 இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. அப்படியே வந்தாலும், சுப்ரா ஜிடிஆர்150 என்ற பெயரில் தான் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா? அல்லது வியட்நாம் சந்தையை போன்று புதிய பெயரில் அறிமுகப்படுத்தப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

ஏற்கனவே கூறியதுபோல் இந்த ஹோண்டா மேஜ்ஸி-ஸ்கூட்டருக்கு யமஹா ஏரோக்ஸ் 155 முக்கிய போட்டி மாடலாக விளங்குகிறது. நம் நாட்டிலும் விற்பனையில் உள்ள ஏரோக்ஸ் 155-இன் ஆரம்ப இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சமாக உள்ளது. புதிய தலைமுறை ஆர்15 வி4 பைக்கை தொடர்ந்து இந்தியாவில் இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு சமீபத்தில்தான் யமஹா நிறுவனம் புதியதாக மெட்டாலிக் கருப்பு நிறத்தேர்வை வழங்கியுள்ளது.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

கடந்த செப்டம்பரில் இந்தியாவில் களமிறக்கப்பட்ட ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு ஆரம்பத்தில் நீலம் மற்றும் க்ரே வெர்மிலியன் என்ற இரு பெயிண்ட் தேர்வுகளும், மோட்டோஜிபி எடிசனும் வழங்கப்பட்டன. இதில் ஏரோக்ஸ் 155 மோட்டோஜிபி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் ரூ.1.30 லட்சமாக உள்ளது. பருத்த உடலமைப்பு, கச்சிதமான கட்டமைப்பு மற்றும் ‘X' வடிவ மத்திய டிசைன் என்பவைதான் ஏரோக்ஸ் 155-இன் முக்கிய ஹைலைட்களாகும்.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

உண்மையில் இந்திய சந்தைக்கு ஏரோக்ஸ் போன்ற ஸ்கூட்டர்கள் முற்றிலும் புதியதாகும். ஏனெனில் இதில் ஓட்டுனர் தனது கால்களை மற்ற ஸ்கூட்டர்களை போல் அல்லாமல், பைக்கை போல் பக்கவாட்டுகளில் வைக்க வேண்டும். இருப்பினும், வெளிநாட்டு சந்தைகளில் ஏரோக்ஸ் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், தைரியமாக இந்தியாவிலும் யமஹா களமிறக்கியுள்ளது.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

வெவ்வேறான வால்வு செயல்பாட்டு (VVA) தொழிற்நுட்பம் உள்பட சில தொழிற்நுட்பங்களை ஆர்15 பைக்கில் இருந்து பெறுகின்ற ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய, யமஹா மோட்டார்சைக்கிள் இணைப்பு செயலி, 5.8 இன்ச் எல்சிடி க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப்கள், 12 சிறிய எல்இடி பல்புகளை கொண்ட எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

யமஹா ஏரோக்ஸ்155-க்கு போட்டியாக, 2022 ஹோண்டா சுப்ரா ஜிடிஆர்150!! இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா?

விவிஏ தொழிற்நுட்பத்துடன் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 155சிசி, லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 4-வால்வு ப்ளூ கோர் என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 15 எச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. அமைதியான என்ஜின் ஸ்டார்ட்டிற்காக ஸ்மார்ட் என்ஜின் ஜெனரேட்டர் மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் அமைப்பு உள்ளிட்டவற்றையும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் பெறுகிறது.

Most Read Articles
English summary
Honda Supra GTR 150 Scooter Unveiled.
Story first published: Wednesday, December 29, 2021, 23:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X