பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் 2019 அக்டோபரில் இந்தியாவில் நடைபெற்ற இந்தியன் பைக் வாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்த அட்வென்ச்சர் பைக் இந்திய சந்தையில் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கேடிஎம் நிறுவனம் தெரிவித்தது.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக 790 அட்வென்ச்சரின் அறிமுகம் தள்ளிப்போனது. தற்போது வரையில் இந்த பைக்கின் அறிமுகம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் கேடிஎம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

இந்த நிலையில் தற்போது 790 அட்வென்ச்சர் பைக் ஒன்றின் ஸ்பை படங்கள், கேடிஎம் பைக்குகளும் தயாரிக்கப்படும் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் இருந்து ஐயம் எ பைக்கர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

இதன் மூலம் முதல் தொகுப்பு கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவில் இறக்குமதியாக ஆரம்பித்துவிட்டன என பேச்சுகள் எழ துவங்கியுள்ளன. இந்த ஸ்பை படங்களில் 790 அட்வென்ச்சர் பைக்கை சுற்றிலும் மற்ற கேடிஎம் & பஜாஜ் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

கேடிஎம் பிராண்டில் இருந்து 790சிசி-இல் 790 ட்யூக் மட்டுமே இதுவரையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. 790 ட்யூக்கை போல் 790 அட்வென்ச்சரும் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

கேடிஎம் நிறுவனத்தின் அடையாளமான ஆரஞ்ச் நிறத்தில் இந்த ஸ்பை படங்களில் காட்சித்தரும் 790 அட்வென்ச்சர் பைக் V-வடிவிலான ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் மற்றும் 5.0 இன்ச் முழு டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரையினை கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் என்பதாலோ என்னவோ இந்த படங்களில் பைக் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இத்தனைக்கும் பைக்கில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு இறக்கை கண்ணாடிகள் மற்றும் எதிர்காற்று தடுப்பு கண்ணாடிகள் இல்லை.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

இவை பின்னர் பொருத்தப்படலாம். ஸ்விட்ச் செய்யக்கூடிய கார்னரிங் & ஆஃப்-ரோடு ஏபிஎஸ், மிகவும் உணர்வுதிறன்மிக்க டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கிய போஸ்ச் 9.1 எம்பி என்ற எலக்ட்ரானிக் தொகுப்புகள் 790 அட்வென்ச்சரில் வழங்கப்படுகின்றன.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

அதுமட்டுமின்றி தெரு, சாலை, ஆஃப்-ரோடு மற்றும் கூடுதல் தேர்வு (ராலி) என மொத்தம் நான்கு விதமான ரைடிங் மோட்களையும் இந்த அட்வென்ச்சர் பைக்கில் கேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. 790 அட்வென்ச்சரில் 799சிசி இணையான-இரட்டை, லிக்யுடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜின் தொழிற்சாலையில் காட்சிதந்த கேடிஎம் 790 அட்வென்ச்சர்!! இந்தியாவில் விற்பனைக்கு வருகிறதா?

ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப மிகவும் வலிமையான குறை & மத்திய ரேஞ்சை கொண்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 94 பிஎச்பி மற்றும் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 790 Adventure Spied Inside Bajaj Auto Pune Plant, Launch Soon.
Story first published: Thursday, July 8, 2021, 8:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X