ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகள் இந்தியாவில் கடந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.82 லட்சம் மற்றும் ரூ.2.09 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

முந்தைய தலைமுறை ஆர்சி125 மற்றும் ஆர்சி200 பைக்குகளின் விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவில் தான் விலையை கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டையும் தொடர்ந்து புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 பைக்கும் இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

புதிய ஆர்சி390 பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கில் எல்இடி டிஆர்எல்கள் & ஒருங்கிணைக்கப்பட்ட இண்டிகேட்டர்களுடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

இதனுடன் ரேடியேட்டர் & என்ஜினை பாதுகாக்கும் வகையில் இரு துண்டுகளாக முன்பக்க ஃபெண்டர் வழங்கப்பட்டுள்ளது. மடக்கும் வசதியுடன் மிக அகலமாக பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் மோட்டார்சைக்கிளின் காற்று இயக்கவியல் பண்பும் முந்தைய தலைமுறையில் இருந்து மேம்பட்டுள்ளது.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

க்ளிப்-ஆன் ஹேண்டில்பாரை பெற்றுள்ள புதிய ஆர்சி200-இல் ஆரஞ்ச்-கருப்பு மற்றும் ஆரஞ்ச்-வெள்ளை என இரட்டை நிற பெயிண்ட் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் புதிய ஆர்சி200 பைக் பெற்று வந்துள்ளது. இத்தகைய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை கேடிஎம் 250 அட்வென்ச்சரில் பார்க்க முடியும்.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

இந்த கன்சோலானது முந்தைய ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்றாக நீல நிற பேக்லிட்-ஐ கொண்டுள்ளது. புதிய அல்ட்ரா எடை குறைவான ஃப்ரேம்வொர்க்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் 2021 கேடிஎம் ஆர்சி200 பைக்கின் எடை கிட்டத்தட்ட 1.5 கிலோ வரையில் குறைந்துள்ளது. அடுக்கடுக்காக அடிக்கப்பட்ட ஃப்ரேம் மற்றும் போல்ட் ஆன் சப்-ஃப்ரேம் பைக்கின் அதிவேகத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

அதுமட்டுமில்லாமல் இந்த ஃப்ரேம்கள் அதிவேகத்தின்போதும் ஓட்டுனருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவைகளாக விளங்குகின்றன. இந்த நிலையில் புதிய ஆர்சி200 பைக்கின் தோற்றத்தை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளது. ரோலிங் ரைஸ் என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை கீழே காணலாம்.

Image Courtesy: ROLLING PEACE

புதிய தலைமுறை ஆர்சி125 பைக்கை போல் புதிய ஆர்சி200-லும் வழக்கமான என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் 199.5சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினானது சிறந்த செயல்படுதிறன், முடுக்கம் மற்றும் கூலிங் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 25.8 எச்பி மற்றும் 19.5 என்எம் டார்க் திறனை பெறலாம்.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

குறைந்த உராய்விற்காகவும், கூடுதல் ஆற்றலிற்காகவும் இந்த 199.5சிசி என்ஜின் அமைப்பில் கார்பன் கோட்டட் கேம் லிவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீண்ட ஆயுள் மற்றும் மென்மையான முடுக்கத்திற்காக தலையில் தெளிக்கும் ஒரு முனையை பயன்படுத்தி, பிஸ்டன் குளிர்விக்கப்படுகிறது.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

புதிய தலைமுறை ஆர்சி200 பைக்கிற்கு 40% பெரிய ஏர்பாக்ஸை கேடிஎம் நிறுவனம் சேர்த்துள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இந்த பைக்கில் 320மிமீ டிஸ்க் முன் சக்கரத்திலும், 230மிமீ டிஸ்க் பின் சக்கரத்திலும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பைக்கின் எடை கிட்டத்தட்ட 1.5 கிலோ குறைந்திருப்பதற்கு எடை குறைவான சேசிஸும் ஒரு காரணமாகும்.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் முன்பை காட்டிலும் 3.4 கிலோ எடை குறைவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பைக்கின் எடை கணிசமாக குறைந்திருந்தாலும், புதிய ஆர்சி200 பைக்கின் சக்கரங்கள் பந்தய களத்திலும் விரைவான திருப்புதலை வழங்கக்கூடியவை. அதேநேரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற பயன்பாட்டிலும் அதிக ஆயுட்காலத்தை இந்த சக்கரங்கள் வழங்கும்.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

சக்கரங்களின் எடை குறைக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்ப அவற்றில் பொருத்தப்படும் ப்ரேக்குகளின் எடையும் கிட்டத்தட்ட 960 கிராம் வரையில் குறைக்கப்பட்டுள்ளன. 2021 கேடிம் ஆர்சி200 பைக்கின் எடை (பெட்ரோல் இல்லாமல்) 151 கிலோ ஆகும். தற்போது ஷோரூம்களை வந்தடைய துவங்கி இருப்பதால் புதிய தலைமுறை ஆர்சி200 பைக்கின் டெலிவிரிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஷோரூம்களில் புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியானது!

அப்டேட் செய்யப்பட்ட ஆர்சி200 பைக்கின் விலையில் பெரியதாக அதிகரிப்பை கேடிஎம் நிறுவனம் கொண்டுவராதது இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விற்பனையில் இந்த 200சிசி கேடிஎம் பைக்கிற்கு, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யமஹா ஆர்15 வி4 பைக் முக்கிய போட்டியாக விளங்கும்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
New KTM RC 200 Arrives At Dealer Showroom – First Look Walkaround
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X