முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக் இந்தியாவில் முதன்முறையாக காட்சி தந்துள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

கேடிஎம் ஆர்சி390 பைக் தயாரிப்பு பணிகளில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அப்கிரேட் செய்யப்பட்ட ஆர்சி390 பைக் ஐரோப்பாவில் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருந்தது.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் முதல்முறையாக 2021 கேடிஎம் ஆர்சி390 பைக் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புனே தொழிற்சாலைக்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படம் இந்தியன் ஆட்டோஸ் ப்ளாக் செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

இந்த படத்தில் பைக்கின் ஓட்டுனர் இருக்கை மற்றும் பின்பக்க கௌல் பகுதிகள் மட்டுமே மறைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகள் பளபளப்பான கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதை தெள்ள தெளிவாக பார்க்க முடிகிறது.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

இது கேடிஎம் ஆர்சி390 என்பதை பைக்கின் மீது ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் பைக்கில் எந்தவொரு லோகோவையோ அல்லது ஸ்டிக்கரையோ பார்க்க முடியவில்லை. எக்ஸாஸ்ட் குழாய் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளதால் இது கேடிஎம் ஆர்சி125 பைக்காகவோ அல்லது ஆர்சி 200 பைக்காகவோ இருக்க வாய்ப்பில்லை.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

இதை எல்லாம் வைத்துதான் இந்த பைக், ஆர்சி390 என நாங்கள் உறுதியாக கூறுகின்றோம். புதிய கேடிஎம் ஆர்சி390 பைக் பெரிய அளவில் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கத்தை பெற்றுள்ளது. இரட்டை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் அமைப்பிற்கு மாற்றாக ஒற்றை எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

ஹெட்லேம்ப்பிற்கு இரு பக்கங்களிலும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு ஏற்றாற்போல் பைக்கின் முன்பக்க கௌலின் வடிவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பைக்கின் தோற்றமும் கூர்மையானதாக மாறியுள்ளது.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

மேலும், பெட்ரோல் டேங்க் மற்றும் ரைடர் இருக்கையின் வடிவமும் திருத்தப்பட்டுள்ளதால் பைக்கின் காற்றியக்கவியல் பண்பும் மேம்பட்டுள்ளது. ஆனால் பின் இருக்கை அவ்வளவு சவுகரியமானதாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் கைப்பிடி உடன் உள்ள பின் இருக்கை அமைப்பு சவுகரியமாக அமர முடியாதபடி அகலமானதாக காட்சியளிக்கிறது.

முதன்முதலாக இந்தியாவில் காட்சிதந்த கேடிஎம் ஆர்சி390!! பைக் மொத்தமாக மாறியுள்ளது...

இவை எல்லாத்தையும் விட முக்கிய அம்சமாக எக்ஸாஸ்ட் குழாய் தற்போதைய ஆர்சி390 பைக்குடன் ஒப்பிடுகையில் சற்று கீழ்நோக்கி வளைக்கப்பட்டுள்ளது. மேலும் 390 ட்யூக்கை போன்று போல்ட்-ஆன் துணை ஃப்ரேம்-ஐயும் புதிய ஆர்சி390 பைக் பெற்றுள்ளது.

புதிய அலாய் சக்கரங்களை ஏற்றுள்ள 2021 ஆர்சி390 பைக்கில் முன் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள ரோட்டாரும் சற்று பெரிய அளவில் காட்சியளிக்கிறது. இந்த ஸ்பை படத்தில் பைக்கின் பின்பகுதியை பார்க்க முடியவில்லை. நமக்கு தெரிந்த வரையில் டெயில்லைட் க்ளஸ்ட்டரிலும் கேடிஎம் நிறுவனம் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
New KTM RC 390 Spied in India for 1st Time. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X