புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கின் புதிய டீசர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தான் அதன் புதிய ஆர்சி125 மற்றும் ஆர்சி200 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலைகள் முறையே ரூ.1.82 லட்சம் ரூ.2.09 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இவற்றை தொடர்ந்து அடுத்ததாக புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கை விற்பனைக்கு கொண்டுவர கேடிஎம் தயாராகி வருகிறது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் புதிய கேடிஎம் ஆர்சி390 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில், 'Racing Soon' என்ற வார்த்தைகள் மற்றும் புதிய ஆர்சி390 பைக்கின் படத்துடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

மேலும் பதிவில், உங்களது பந்தய உலகினில் நுழைய தயாராகுங்கள். மோட்டோஜிபி-ஆல் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட வேக மெஷின் விரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 பைக்குகள் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்ட போது கிடைத்திருந்த ஸ்பை படங்கள் சிலரை வெகுவாக ஏமாற்றமடைய செய்திருந்தன.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

ஏனெனில் அந்த படங்களில், மறைப்புகளை தாண்டி காட்சியளித்த பைக்கின் தோற்றம் அவ்வாறு இருந்தது. இருப்பினும் இதன் தோற்றத்தில் நமக்கு பல சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளன. அறிமுகத்தின்போதுதான் இவை க்ளியராகும். முக்கியமான மாற்றமாக, இரட்டை பிரோஜெக்டர் யூனிட்டிற்கு மாற்றாக சிங்கிள் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

அதேபோல் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி சற்று பெரியதாக்கப்பட்டிருக்க, எல்இடி டிஆர்எல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் பெட்ரோல் டேங்க், பாடி கிராஃபிக்ஸ், ஃபைரிங் மற்றும் பின்பக்க முனை பகுதி உள்ளிட்ட மற்ற பாகங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு பைக்கின் தோற்றத்தில் மட்டுமில்லாமல், காற்று இயக்கவியல் பண்பிலும் குறிப்பிடத்தக்க மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

இந்த வகையில் பைக்கின் பக்கவாட்டு பேனல்களிலும் காற்று துளைகள் புதியதாக கொடுக்கப்பட உள்ளன. மற்றொரு முக்கியமான அப்டேட்டாக, ப்ளூடூத் இணைப்புடனான புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை சொல்லலாம். மேலும், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிகள் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

இவற்றினால் புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் மிகவும் சவுகரியமான ரைடிங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொலைத்தூர பயணங்களுக்கு இந்த மாற்றங்கள் ஏற்றதாக இருக்கும். இருப்பினும் ஆர்சி390-இன் ஆக்ரோஷமான பயணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இதேபோன்றதான மாற்றங்கள் பைக்கின் இருக்கை உயரம் மற்றும் பின் இருக்கை பயணி கால் வைக்கும் பகுதியிலும் கொண்டுவரப்படலாம்.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

ஆனால் ஆர்சி390-இல் முன்பு வழங்கப்பட்ட அதே 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் அதன் புதிய தலைமுறையிலும் தொடரப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக 44 பிஎச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினில் மாற்றம் இருக்காது என்றாலும், என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய டார்க் திறன் 37 என்எம் ஆக அதிகரிக்கப்படலாம்.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

அளவில் பெரிய காற்று பெட்டகத்தை பொருத்துவதினால் இந்த கூடுதல் டார்க் திறன் கிடைக்கலாம். இதன் விளைவாக பைக்கின் அதிகப்பட்ச வேகமும் 11kmph அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. ரைடிங் டைனாமிக்ஸை மேம்படுத்த, ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் பை-டைரக்‌ஷ்னல் விரைவு கியர்மாற்றி உள்ளிட்டவை புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் வழங்கப்பட உள்ளன.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

இவற்றுடன் மேம்படுத்தப்பட்ட வெப்ப சிதறல் அமைப்பையும் இந்த பைக்கில் கேடிஎம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர்த்து முக்கியமான மாற்றமாக புதிய போல்ட்-ஆன் பின்பக்க துணை-ஃப்ரேமில் புதிய ஆர்சி390 உருவாக்கப்பட உள்ளது. இது பைக்கின் ஹேண்ட்லிங்கிற்கும், பேலன்ஸிற்கும் மிகவும் ஏற்றதாக விளங்கும் என கூறப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு ஆர்சி390-இல் யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், மோனோஷாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட உள்ளன.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

ப்ரேக்கிங் பணியினை கவனிக்க, முன்பக்கத்தில் 320மிமீ-லும், பின்பக்கத்தில் 230மிமீ-லும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் இரட்டை-சேனல் போஸ்ச் ஏபிஎஸ் அமைப்பும் இந்த 390சிசி கேடிஎம் பைக்கில் கொடுக்கப்படுகிறது. இத்தகைய அப்டேட்களினால் புதிய கேடிஎம் ஆர்சி390-இன் விலையினை அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM RC390 Teaser.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X