புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

புதுமையான தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

இனி வரும் ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தது நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களை சந்தையில் களமிறக்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் தான் கடந்த ஆண்டில் இருந்து ராயல் என்பீல்டு பைக்குகள் அதிகளவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

இருப்பினும் ஹிமாலயனின் சமீபத்திய சோதனை ஓட்டம் புதிரானதாக விளங்குகிறது. ஏனெனில் மோட்டார்பீம் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் புதிய தோற்றத்தில் ஹிமாலயன் பைக் காட்சியளிக்கிறது.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

இந்த சோதனை ஓட்ட பைக்கை சுற்றி ராயல் என்பீல்டு முத்திரையை தவிர்த்து வேறெந்த லோகோவும் கொடுக்கப்படாவிடினும், இது ஹிமாலயன் என்பதை எளிமையாக அடையாளம் காண முடிகிறது. ஆனால் அட்வென்ச்சர் பயணங்களுக்கான அம்சங்கள் அனைத்தும் இந்த ஹிமாலயனில் நீக்கப்பட்டுள்ளன.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

அதாவது ஹிமாலயனில் 21 இன்ச்சில் முன் சக்கரத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால் இதில் முன் சக்கரம் அந்த அளவிற்கு பெரியதாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அளவில் பெரிய சக்கரங்கள் கரடுமுரடான சாலைகளை கச்சிதமாக கையாளக்கூடியவை.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

இதனால் இது தற்போதைய ஹிமாலயனின் சாதாரண சாலை சார்ந்த வேரியண்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டயர் மட்டுமின்றி ஹிமாலயனின் அடையாளமான முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி மற்றும் ஃபோர்க் கெய்டர்களும் இந்த சோதனை மாதிரியில் இல்லை.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

பெட்ரோல் டேங்கின் வடிவமும் ஸ்டாண்டர்ட் ஹிமாலயன் உடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானதாக உள்ளது. இந்த புதிய ஹிமாலயன் பைக் நிச்சயம் ஆஃப்-ரோடு அல்லாமல் தினசரி பயன்பாட்டிற்காகவும், தொலைத்தூர பயணங்களுக்காகவும் ராயல் என்பீல்டு ஹிமாலயனை வேண்டுவோர்க்கு ஏற்றதாக இருக்கும்.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

புதிய தலைமுறை ஹிமாலயனை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும் சாலை-சார்ந்த ஹிமாலயனை தயாரிக்கும் பணியில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஈடுப்பட்டு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

அப்போது அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயனின் 411சிசி என்ஜின் உடன் தான் இந்த புதிய வேரியண்ட்டும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கிறோம். இதனுடன் பைக்கின் வசதிகள், என்ஜின் மற்றும் மற்ற வன்பொருள்களையும் மேம்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

புதிய தோற்றத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்? புதிய வேரியண்ட் தயாராகிறதா?

ஹிமாலயனின் 411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 24.3 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan Spied Testing. New Variant Or Engine Upgrade?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X