2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் படங்களுடன் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் 2022 பர்க்மேன் 200 தோற்றத்திலும் சரி, செயல்திறனிலும் சரி சற்று அப்கிரேடாகவே இருக்கிறது.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பொதுவாகவே ஸ்கூட்டர்களை காட்டிலும் மேக்ஸி-ஸ்கூட்டர்கள் வெகுவாக நம்மை வசீகரித்துவிடக்கூடியவை. அதிலும் இந்த புதிய பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள விண்ட்ஸ்க்ரீன் நன்கு பெரியதாக பார்ப்போரை மிரள வைப்பதாக உள்ளது.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஹெட்லேம்ப் அமைப்பானது இரட்டை விளக்குகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை தொலைத்தூர பயணங்களுக்கும் ஏற்ற வடிவில் உள்ளது. 125சிசி பர்க்மேனை போன்று இந்த 200சிசி பர்க்மேன் ஸ்கூட்டரில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி வழங்கப்பட்டுள்ளது.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த 2022 மாடலில் பின்சக்கரம் 12 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. இதனை சற்று பெரியதாக வழங்கியிருக்கலாம். ஏனெனில் ஸ்கூட்டரின் மற்ற பாகங்கள் நன்கு பெரியதாக உள்ளன. இருக்கை அடியில் 41 லிட்டர் கொள்ளளவில் சேமிப்பிடமும், முன்பக்கத்தில் 7 லிட்டர் மற்றும் 5.5 லிட்டர் கொள்ளளவில் காலியிடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த பர்க்மேன் 200 ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்க் 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. ஸ்கூட்டரின் மொத்த எடை 163 கிலோ ஆகும். கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் எடையும் கிட்டத்தட்ட இதே தான். ஸ்கூட்டரில் அனைத்தும் ப்ரீமியம் தரத்தில் உள்ளன, விளக்குகள் மட்டும் எல்இடி தரத்தில் இல்லை என்பது மட்டும் ஒரே குறை.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2022 பர்க்மேன் 200 ஸ்கூட்டரில் சிங்கிள் ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் மற்றும் 4 வால்வுகளுடன் 200சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் சிவிடி சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்த என்ஜின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளை சுஸுகி நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. நமக்கு தெரிந்தவரையில் அப்ரில்லா எஸ்.ஆர்160 மேக்ஸி-ஸ்கூட்டருக்கு இணையான என்ஜின் ஆற்றல் உடன் இந்த சுஸுகி மேக்ஸி-ஸ்கூட்டர் கொண்டுவரப்படலாம்.

2022 சுஸுகி பர்க்மேன் 200 மேக்ஸி-ஸ்கூட்டர் வெளியீடு!! இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சஸ்பென்ஷனுக்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியினை கவனிக்க ட்யுல்-சேனல் ஏபிஎஸ் செட்அப் உடன் 13 மற்றும் 12 இன்ச்களில் உள்ள இரு அலாய் சக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு 2022 சுஸுகி பர்க்மேன் 200 ஸ்கூட்டர் விற்பனைக்குவர வாய்ப்பு சற்று மங்கலாகவே உள்ளது.

Most Read Articles

English summary
New Suzuki Burgman 200 Unveiled In US Market. Read All Details In Tamil.
Story first published: Monday, June 14, 2021, 22:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X