யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர் நாளை (செப்.21) விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீசரினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

யமஹா நிறுவனம் அதன் புதிய 155சிசி மேக்ஸி-ஸ்கூட்டரான ஏரோக்ஸை இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக காட்சிப்படுத்தியது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்காததால் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் முடிவிற்கு உடனடியாக யமஹா வரவில்லை.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

ஆனால் தற்போது நம் நாட்டில் மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் உருவாகி வருவதால், யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் 155 மூலம் இந்தியாவில் அதன் ஸ்கூட்டர்கள் வரிசையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

இந்த செப்டம்பர் 21ஆம் தேதி இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் மட்டுமின்றி, புதிய யமஹா ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் மோட்டார்சைக்கிள்களையும் யமஹா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் களமிறக்கப்படும் முதல் மேக்ஸி-ஸ்டைல் ஸ்கூட்டராக ஏரோக்ஸ் 155 விளங்கவுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டரின் தோற்றத்தில் வேறெந்த ஸ்கூட்டரும் விற்பனையில் இல்லை.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

இருப்பினும் இந்த 155சிசி யமஹா ஸ்கூட்டருக்கு அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி-ஸ்கூட்டர் மட்டும் விற்பனையில் போட்டியாக இருக்கலாம். இதற்கு முன் யமஹா ஏரோக்ஸ் 155-இன் அனுமதி ஆவணங்களின் மூலம் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் சிலவற்றை நாம் அறிந்திருந்தோம். அதாவது, யமஹா ஒய்.இசட்.எஃப் ஆர்15 மற்றும் எம்டி-15 பைக்குகளில் பொருத்தப்படும் அதே 155சிசி விவிஏ என்ஜின் தான் ஏரோக்ஸிலும் வழங்கப்பட உள்ளது.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவிற்கு தான் புதியதே தவிர்த்து, இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. யமஹா பிராண்டில் இருந்து கடைசியாக களமிறக்கப்பட்ட எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தின் போது, 150சிசி- 250சிசியில் பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டுவரவுள்ளதாக யமஹா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

இந்த வகையில் கொண்டுவரப்படும் ஏரோக்ஸ் 155, நேர்த்தியான டிசைனில், பிரிவிலேயே சிறந்த வசதிகளுடன், செயல்திறன்மிக்க ஸ்கூட்டர்களை விரும்புவோர்க்கு ஏற்றதாக இருக்கும். ஸ்டைலை பொறுத்தவரையில், எல்இடி டிஆர்எல்கள் உடன் இரட்டை எல்இடி ஹெட்லைட் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்பை இந்தோனிஷிய சந்தையில் 2021 ஏரோக்ஸ் 155 பெற்றுள்ளது.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

இருப்பினும் ஏரோக்ஸ் 155 முழு மேக்ஸி-ஸ்கூட்டரா என்று கேட்டால், முழுவதுமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில பாகங்களை யமஹாவின் பிரிமீயம் பிரிவு ஸ்கூட்டர்களிடம் இருந்து பெற்றிருக்கும் இந்த 155சிசி ஸ்கூட்டரில் பொருத்தப்படும் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 14.75 பிஎச்பி பவரையே வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் ஆற்றல் ஆனது நம் நாட்டில் பின்பற்றப்படும் மாசு உமிழ்வு விதிகளினால், வெளிநாட்டு வெர்சன்களை காட்டிலும் சற்று குறைவாகும்.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

புதிய யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் நீளம் 1980மிமீ, அகலம் 700மிமீ மற்றும் உயரம் 1150மிமீ ஆகும். வீல்பேஸ் ஆனது 1350மிமீ நீளத்தில் உள்ளது. தொழிற்நுட்ப சிறப்பம்சங்களாக ஏரோக்ஸில் ப்ளூடூத் மற்றும் யமஹாவின் Y-இணைப்பு ஸ்மார்ட்போன் செயலி உடன் இணைக்கக்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

இதில் ஸ்மார்ட்போன் இணைப்பு செயலியின் மூலம் பாரமரிப்பிற்கான கால அட்டவணை மற்றும் கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை ஓட்டுனர் பெற முடியும். இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் வழங்கப்படும் மற்ற சிறப்பம்சங்களாக ஹசார்ட் விளக்குகள், சாவி இல்லா நுழைவு, என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவில் இருக்கைக்கு அடியில் சேமிப்பிடம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!

சஸ்பென்ஷனுக்கு இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நீர்த்தேக்க ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் & ட்ரம் ப்ரேக்குகள் கவனித்து கொள்கின்றன. ஆனால் உண்மையில் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டரை காட்டிலும் புதிய ஆர்15 மோட்டார்சைக்கிள்கள் மீது இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Aerox 155 Launch Tomorrow – Expected Price, Details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X