Just In
- 2 hrs ago பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- 4 hrs ago வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
- 8 hrs ago ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
- 10 hrs ago இந்தியாவின் முதல் தங்க நிறம் கொண்ட ஸ்கார்பியோ!.. இந்த கலரும் அதுக்கு செம்ம எடுப்பா இருக்கு!
Don't Miss!
- News ஈரானின் தாக்குதலை முறியடிக்க.. பெரிய விலை கொடுத்த இஸ்ரேல்! இதன் பின்னரும் சமாளிப்பது கடினம்தான்
- Movies புத்தாண்டு அதுவுமா புது ஜோடிக்கு விருந்து வைத்த கமல்ஹாசன்.. யாரெல்லாம் கூட இருக்காங்க பாருங்க!
- Finance தேங்காய் பூ விலை ஏற்றம்.. அப்படி என்ன மவுசு இதுல? இது ஏன் இவ்வளவு விலை விக்கிது?
- Lifestyle இந்த தமிழ் புத்தாண்டிற்கு ஸ்பெஷலா வீட்டில் இந்த மாதிரி பாயாசத்தை ட்ரை பண்ணுங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்..
- Technology அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
- Sports MI vs CSK : பல்தான்ஸ் தான் கெத்து.. சிஎஸ்கே அணியை அடித்து ஓடவிடுவார்கள்.. இந்திய ஜாம்பவான் கருத்து!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
யமஹாவின் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர்!! அறிமுக தேதி அறிவிப்பு - இந்தியாவிற்கு முற்றிலும் புதியது!
யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டர் நாளை (செப்.21) விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீசரினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
யமஹா நிறுவனம் அதன் புதிய 155சிசி மேக்ஸி-ஸ்கூட்டரான ஏரோக்ஸை இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக காட்சிப்படுத்தியது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்காததால் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் முடிவிற்கு உடனடியாக யமஹா வரவில்லை.
ஆனால் தற்போது நம் நாட்டில் மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் உருவாகி வருவதால், யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் 155 மூலம் இந்தியாவில் அதன் ஸ்கூட்டர்கள் வரிசையை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செப்டம்பர் 21ஆம் தேதி இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் மட்டுமின்றி, புதிய யமஹா ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம் மோட்டார்சைக்கிள்களையும் யமஹா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் களமிறக்கப்படும் முதல் மேக்ஸி-ஸ்டைல் ஸ்கூட்டராக ஏரோக்ஸ் 155 விளங்கவுள்ளது. அதாவது இந்த ஸ்கூட்டரின் தோற்றத்தில் வேறெந்த ஸ்கூட்டரும் விற்பனையில் இல்லை.
இருப்பினும் இந்த 155சிசி யமஹா ஸ்கூட்டருக்கு அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி-ஸ்கூட்டர் மட்டும் விற்பனையில் போட்டியாக இருக்கலாம். இதற்கு முன் யமஹா ஏரோக்ஸ் 155-இன் அனுமதி ஆவணங்களின் மூலம் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் சிலவற்றை நாம் அறிந்திருந்தோம். அதாவது, யமஹா ஒய்.இசட்.எஃப் ஆர்15 மற்றும் எம்டி-15 பைக்குகளில் பொருத்தப்படும் அதே 155சிசி விவிஏ என்ஜின் தான் ஏரோக்ஸிலும் வழங்கப்பட உள்ளது.
யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவிற்கு தான் புதியதே தவிர்த்து, இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. யமஹா பிராண்டில் இருந்து கடைசியாக களமிறக்கப்பட்ட எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தின் போது, 150சிசி- 250சிசியில் பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டுவரவுள்ளதாக யமஹா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வகையில் கொண்டுவரப்படும் ஏரோக்ஸ் 155, நேர்த்தியான டிசைனில், பிரிவிலேயே சிறந்த வசதிகளுடன், செயல்திறன்மிக்க ஸ்கூட்டர்களை விரும்புவோர்க்கு ஏற்றதாக இருக்கும். ஸ்டைலை பொறுத்தவரையில், எல்இடி டிஆர்எல்கள் உடன் இரட்டை எல்இடி ஹெட்லைட் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்பை இந்தோனிஷிய சந்தையில் 2021 ஏரோக்ஸ் 155 பெற்றுள்ளது.
இருப்பினும் ஏரோக்ஸ் 155 முழு மேக்ஸி-ஸ்கூட்டரா என்று கேட்டால், முழுவதுமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில பாகங்களை யமஹாவின் பிரிமீயம் பிரிவு ஸ்கூட்டர்களிடம் இருந்து பெற்றிருக்கும் இந்த 155சிசி ஸ்கூட்டரில் பொருத்தப்படும் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 14.75 பிஎச்பி பவரையே வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் ஆற்றல் ஆனது நம் நாட்டில் பின்பற்றப்படும் மாசு உமிழ்வு விதிகளினால், வெளிநாட்டு வெர்சன்களை காட்டிலும் சற்று குறைவாகும்.
புதிய யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் நீளம் 1980மிமீ, அகலம் 700மிமீ மற்றும் உயரம் 1150மிமீ ஆகும். வீல்பேஸ் ஆனது 1350மிமீ நீளத்தில் உள்ளது. தொழிற்நுட்ப சிறப்பம்சங்களாக ஏரோக்ஸில் ப்ளூடூத் மற்றும் யமஹாவின் Y-இணைப்பு ஸ்மார்ட்போன் செயலி உடன் இணைக்கக்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.
இதில் ஸ்மார்ட்போன் இணைப்பு செயலியின் மூலம் பாரமரிப்பிற்கான கால அட்டவணை மற்றும் கடைசியாக பார்க் செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை ஓட்டுனர் பெற முடியும். இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் வழங்கப்படும் மற்ற சிறப்பம்சங்களாக ஹசார்ட் விளக்குகள், சாவி இல்லா நுழைவு, என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவில் இருக்கைக்கு அடியில் சேமிப்பிடம் உள்ளிட்டவை அடங்குகின்றன.
சஸ்பென்ஷனுக்கு இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் வழக்கமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் நீர்த்தேக்க ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியினை சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் & ட்ரம் ப்ரேக்குகள் கவனித்து கொள்கின்றன. ஆனால் உண்மையில் ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டரை காட்டிலும் புதிய ஆர்15 மோட்டார்சைக்கிள்கள் மீது இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
-
சென்னைக்கு வருகிறாரா எலான் மஸ்க்? டெஸ்லா காரால் கூரையை பிச்சு கொட்டப்போகும் வேலை வாய்ப்புகள்!
-
அரபு நாடுகளின் அடி மடியிலேயே கை வைத்த டாடா! இததான் இந்தியாவே எதிர்பாத்துச்சு! சினிமாவை விஞ்சும் மாஸ் சம்பவம்!
-
இந்த காருக்கு இவ்வளவு டிமாண்டா? 0 ஸ்டார் வாங்குனாலும் வெளிநாட்டுகாரங்க எல்லாம் விரும்பி வாங்குறாங்க!