செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

ஹோண்டா சிபி125ஆர், எஃப் மோண்டியல் எச்பிஎஸ் 125 மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக யமஹா நிறுவனம் அதன் புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு வெளிகாட்டியுள்ளது.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

இந்திய சந்தையில் இந்த யமஹா பைக் கொண்டுவரப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதிக விலை தான் நிர்ணயிக்கப்படும், இது இந்த பைக்கை நம் நாட்டில் பிரபலமடைய செய்யாது.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

எனவே நமது இந்திய சந்தையில் 125சிசி-இல் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களே இல்லையா என்று கேட்டால், கேடிஎம் ட்யூக்125 மற்றும் ஆர்சி125 போன்ற பைக்குகள் இருகின்றன. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூட என்எஸ்125 மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

இதனால் யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்125 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் ஆச்சிரியப்படுவதற்கு எதுவுமில்லை. யமஹா எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகப்பட்சமாக 15 பிஎஸ் மற்றும் 11.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

இந்த வகையில் பார்த்தோமேயானால் இந்த யமஹா பைக்கின் என்ஜின் ஆற்றல் கேடிஎம் 125 ட்யூக்கை காட்டிலும் சற்று அதிகமாகும். ஆனால் டார்க் திறன் குறைவு. கேடிஎம் 125 ட்யூக்கின் எக்ஸ்ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.1.62 லட்சமாக உள்ளது.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

இதனால் கிட்டத்தட்ட இதே விலையில் தான் யமஹா எக்ஸ்.எஸ்.125 பைக் ஒருவேளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் நிர்ணயிக்கப்படும். இந்தியாவில் எப்போதுமே ரெட்ரோ ஸ்டைல் கொண்ட மோட்டார்சைக்கிள் வரவேற்பு இருந்து வருகிறது.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

ராயல் என்பீல்டு, ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை அதற்கு சாட்சி. இந்த ஒரு விஷயம் யமஹாவின் இந்த புதிய பைக்கிற்கு சாதகமாக அமையும். அதுமட்டுமில்லாமல் குறைந்த விலையில் யமஹா பைக் விற்பனைக்கு வருகிறது என்றால், யாருக்கு தான் வாங்க தோன்றாமல் இருக்கும்.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

இந்தியாவில் அடுத்ததாக எஃப்.இசட் பைக்குகளை அடிப்படையாக கொண்ட எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை களமிறக்க யமஹா தயாராகி வருகிறது. இதில் அதிகப்பட்சமாக 12.4 பிஎஸ் மற்றும் 13.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 149சிசி என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையினை ரூ.1.2 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். இதனால் இந்தியாவின் மலிவான ரெட்ரோ ஸ்டைல் கொண்ட ஸ்ட்ரீட் பைக்காக இந்த யமஹா பைக் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதனுடன் ஒப்பிட்டால் எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக் சற்று விலைமிக்கதாக விளங்கலாம்.

செம்மையா இருக்கு... புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை வெளியிட்டது யமஹா!!

ஆனால் அதற்கு ஏற்றாற்போல் இந்த பைக்கில் என்ஜினையும், கூடுதல் செயல்திறன் பாகங்களையும் யமஹா வழங்கியுள்ளது. மிகவும் த்ரில்லான பயணத்தை விரும்பக்கூடியவர்களுக்கு எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை காட்டிலும் எக்ஸ்.எஸ்.ஆர் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
New Yamaha XSR125 specs features engine details revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X