புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

நான்காம் தலைமுறை ஒய்.இசட்.எஃப்-ஆர்15 பைக்கின் மூலம் மீண்டும் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை யமஹா ஈர்த்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஆர்15 பைக்குடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் தான். இருப்பினும் அதற்கு ஏற்ப மோட்டார்சைக்கிளின் தோற்றத்தில் கவனிக்கத்தக்க அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

அதேநேரம் சில பிரிவின்-முதல் வசதிகளும் புதிய ஆர்15 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவை போதாது என்போர்க்காகவே தற்போது நான்காம் தலைமுறை ஒய்.இசட்.எஃப்-ஆர்15 பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை யமஹா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

எனவே புதிய யமஹா ஆர்15 வெர்சன்-4 பைக்கை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் இந்த ஆக்ஸஸரீகளையும் ஒரு கண்ணோட்டம் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஃப்ரேம் ஸ்லைடர் - ரூ.1,650

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளில் ஃப்ரேம் ஸ்லைடர் எனப்படும் என்ஜின் அடிப்பக்க பேனல்கள் விலைமிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

இது விபத்துகளின் போது பைக்கின் என்ஜினை பெரிய அளவில் பாதுகாக்கும்.

க்ளட்ச், ப்ரேக் லிவர் - ரூ.950

உங்களது கைகள் சற்று சிறியதாக இருந்தால், யமஹவின் இந்த அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ப்ரேக் & க்ளட்ச் லிவர்களை கூடுதல் ஆக்ஸஸரீயாக வாங்கலாம்.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

இதன் மூலம் எந்தவொரு ஓட்டுனரின் கைக்கும் ஏற்ப திருகாணியை அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ள முடியும். இதன் விளைவாக, சிறந்த க்ளட்ச் மற்றும் ப்ரேக் உணர்வை பெறலாம்.

கை விரல்கள் பாதுகாப்பான் - ரூ.900

விபத்துகளின் போது பைக்கின் க்ளட்ச் & ப்ரேக் லிவர் ஆனது எளிதாக உடைந்துவிடும். ஏனெனில் விபத்தினால் பைக் கீழே விழும்போது முதலில் அடிப்படுவது பைக்கின் ஹேண்டில்பார் தான்.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

இதனாலேயே ரைடரின் கை விரல்கள் பாதிப்படைக்கின்றன. இதனை தவிர்க்கவே இந்த பாதுக்காப்பான் ஆகும்.

யுஎஸ்பி சார்ஜர் - ரூ.750

பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே மொபைல் போனை பயன்படுத்துவது தற்போதெல்லாம் ட்ரெண்டாகிவிட்டது. இதனால் மொபைல் போனை பைக்கின் பேட்டரியின் மூலமாக சார்ஜ் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

தற்போதைய மாடர்ன் பைக்குகள் பெரும்பான்மையானவற்றில் மொபைல் போனை சார்ஜ் ஏற்றி கொள்ளும் வசதி உள்ளது. இந்த வகையில் புதிய ஆர்15 வி4 மாடலும் இந்த வசதியினை பெற்றுள்ளது. இருப்பினும் பைக்கையும் மொபைல் போனையும் இணைக்க யுஎஸ்பி சார்ஜர் கேபிள் தேவைப்படுகிறது. அதனை யமஹா நிறுவனம் கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கியுள்ளது.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

பைக்கின் அடித்தட்டு - ரூ.550

பெரிய அளவிலான வேகத்தடைகளின் மீது ஏறி இறங்கும்போதும், எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறக்கும்போதும் பைக்கின் அடிப்பகுதி சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கவே இந்த அடித்தட்டு ஆகும். ஆஃப்-ரோடு சாலையில் தான் தினமும் பைக்கை இயக்கவுள்ளீர்கள் என்றால், இந்த அம்சம் கட்டாயம் பைக்கில் இருக்க வேண்டும்.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கை கவர் - ரூ.490

ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஸ்டாக் இருக்கை கவர்கள் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டால், ஒரு கட்டத்திற்கு மேல் சேதமாகும். இதனால் கூடுதல் ஆக்ஸஸரீயாக இருக்கை கவர்களை வாங்கி கொள்வது நல்லது. அத்துடன் இதன் மூலம் கூடுதல் குஷின்களையும் பெறலாம் என்கிறது யமஹா.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

பெட்ரோல் டேங்க் பேட் - ரூ.190

யமஹா ஆர்15 போன்றதான பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது கவர்ச்சிகரமான டிசைனிலான பேட் இருந்தால், ஒவ்வொரு முறை பைக்கை எடுக்கும்போது எவர் ஒருவருக்கும் மெல்லிய புன்னகை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் இந்த அம்சம் பெட்ரோல் டேங்கின் மேற்பரப்பு பெயிண்ட் சேதமடைவதையும் தவிர்க்கும்.

புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!

இத்துடன் புதிய யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி-ஸ்கூட்டருக்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவையாவன,

 • KYB அல்டிமேட் சீரிஸ் ஏரோக்ஸ் தொகுப்பு - ரூ.17,024
 • ஸ்போர்ட் ஸ்க்ரீன் ஸ்மோக் எஃபெக்ட் - ரூ.3,930
 • ஸ்கூட்டரை மழை, தூசியில் இருந்து பாதுகாக்க கவர் - ரூ.350
 • புதிய யமஹா ஆர்15 வி4 பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பைக்கின் ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!
  • இருக்கை கவர் - ரூ.650
  • எல்இடி ஃப்ளாஷர் - ரூ.1,490
  • விஸர் ட்ரிம் கார்பன் - ரூ.7,216
  • இதில் கே.ஒய்.பி நிறுவனத்தின் எரிவாயு-சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர் என்ற பின்பக்கத்திற்கான சஸ்பென்ஷன் அமைப்பு கூடுதல் சவுகரியத்தை வழங்கும். ஏனெனில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் வழக்கமான பின்பக்க சுருள் ஷாக் அப்சார்பர்கள் அட்ஜெஸ்ட் முடியாதவைகளாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha R15 V4 Official Accessories Revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X