சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

இந்தியாவில் சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

இந்தியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று நெக்ஸூ (Nexzu). ரோட்லார்க் (Roadlark) என்ற எலெக்ட்ரிக் சைக்கிளை நெக்ஸூ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் முக்கியமான சிறப்பம்சமே இதன் அதிக ரேஞ்ச்தான். இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பேட்டரி இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது. நெக்ஸூ நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. எந்த வகையான எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் என்றாலும் அதிகமாக கவனிக்க கூடிய ஒரு விஷயம் ரேஞ்ச்தான். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை தீர்மானிப்பதில் ரேஞ்ச் முக்கியமான பங்கை வகிக்கிறது.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

அப்படி இருக்கும்போது, நெக்ஸூ ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளின் ரேஞ்ச் 100 கிலோ மீட்டர்களாக இருப்பது உண்மையிலே மிகவும் சிறப்பான விஷயம். நெக்ஸூ ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளில், BLDC 250w 36v மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பெடல்-அஸிஸ்ட் மோடில், இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் 100 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

அதே நேரத்தில் ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என நெக்ஸூ நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து நெக்ஸூ நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான பங்கஜ் திவாரி கூறுகையில், ''எலெக்ட்ரிக் சைக்கிள் சந்தையில் நெக்ஸூ ரோட்லார்க் மிகவும் முக்கியமான ஒரு தயாரிப்பாக இருக்கும்.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

மக்கள் எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு மாறுவதை நெக்ஸூ ரோட்லார்க் ஊக்குவிக்கும். பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் மொபட்களுக்கு இது சிறந்த மாற்றாக அமையும்'' என்றார். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது சைக்கிள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு சைக்கிளை பயன்படுத்துவது உண்மையிலேயே மிகச்சிறந்த மாற்று.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

அத்துடன் உடற்பயிற்சிக்காகவும் பலர் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக சைக்கிள்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதும் முக்கியமான ஒரு சிறப்பம்சம். நெக்ஸூ நிறுவனத்திற்கு மதுரை, அகமதாபாத், குர்கான் மற்றும் இந்தியாவின் வேறு சில நகரங்களில் டீலர்ஷிப்கள் இருக்கின்றன.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

ஆனால் இந்தியா முழுவதும் டீலர்ஷிப்களை அமைப்பதற்கான முயற்சிகளை நெக்ஸூ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ரோட்லார்க் மிக முக்கியமான தயாரிப்பு என்பதால், இதன் மூலம் இந்தியா முழுவதும் காலடி பதிக்க நெக்ஸூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர டைரக்ட் டூ ஹோம் மாடலையும் (Direct To Home Model) பின்பற்றி வருவதாக நெக்ஸூ நிறுவனம் கூறியுள்ளது.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

நெக்ஸூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா வெப்சைட்டில் செய்யப்படும் ஆர்டர்களுக்கு வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

எனவே நெக்ஸூ ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதன் ரேஞ்ச் மிகவும் சிறப்பாக உள்ளது. உண்மையை சொல்லப்போனால் இந்தியாவில் தற்போது கிடைக்கும் ஒரு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் ரேஞ்ச் அதிகம்.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ரோட்லார்க் தவிர, நெக்ஸூ நிறுவனத்தின் வருங்கால தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையும், காற்று மாசுபாடு பிரச்னையும் மக்களை கடுமையாக பாதித்து கொண்டுள்ளது.

சூப்பரான எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ கிமீ ஓடுமா? வேற லெவல்ல இருக்கே!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசும் தற்போது ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டின் மூலமாக குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது, இந்தியாவின் பொருளாதாரமும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Nexzu roadlark e cycle revealed check details here
Story first published: Tuesday, November 30, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X