20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்களில் 20,000 என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. அதற்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்துவரும் வரவேற்பு தான் சாட்சியாகும். ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1-ஐ எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற இரு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

ஓலாவின் தொழிற்சாலையில் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றதை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ட்ரைவ் கொடுக்கும் அளவிற்கு எஸ்1 இ-ஸ்கூட்டர்கள் தயாராகின. கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பார்வைக்கு நேரடியாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காட்சி தந்தன.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

நேரலையாக பார்த்தது மட்டுமின்றி, டெலிவிரிக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரை ஓட்டியும் பார்த்தனர். இந்தியாவில் கடந்த மாதத்தில் துவங்கிய டெஸ்ட் ட்ரைவ்களை சுமார் 1,000 நகரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஓலா எலக்ட்ரிக்கின் தற்போதைய குறிக்கோள்களில் ஒன்று. இதன் மூலமாக ஒரே நாளில் சுமார் 10,000 டெஸ்ட் ட்ரைவ் என்ற அசாத்தியமான இவி டெஸ்ட் ட்ரைவ்களை எட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் மிக பெரிய இவி டெஸ்ட் ட்ரைவ்-ஐ துவங்கியுள்ள நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு டெஸ்ட் ட்ரைவ்கள் தாராளமாக அவற்றை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முன்வந்தாலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், எஸ்1 இ-ஸ்கூட்டர்களின் டெலிவிரி தேதிகளை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

டெஸ்ட் ட்ரைவ்களில் இந்த இமாலய எண்ணிக்கையை எட்டி இருப்பது குறித்து ஓலா எலக்ட்ரிக்கின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், "நாங்கள் 20,000 டெஸ்ட் ட்ரைவ்களை முடித்துள்ளோம்! இந்தியாவிலேயே, ஒருவேளை உலகிலேயே கூட இதுவரை இல்லாத வகையில் மிக பெரிய முயற்சியாக இது இருக்கலாம்" என பதிவிட்டுள்ளார். இது பெரிய சாதனைதான், இருந்தாலும் டெலிவிரி தேதிகள் தொடச்சியாக தாமதமாகி வருவதால் ஓலா வாடிக்கையாளர்கள் சற்று சோகத்தில் உள்ளனர்.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

இதனை வெளிக்காட்டும் விதமாக பாவிஷ் அகர்வாலின் இந்த 20,000 டெஸ்ட் ட்ரைவ்கள் குறித்த பதிவிலும் ஒரு நபர், "நாங்கள் ஸ்கூட்டருக்கான முழு தொகையையும் கடந்த நவம்பர் 11ஆம் தேதியே செலுத்திவிட்டோம். டெலிவிரி தேதி நவ.30ஆக ஒதுக்கப்பட்டது.... இந்த மாதத்தில் (டிசம்பர்) டெலிவிரி எடுக்க வாய்ப்புள்ளதா அல்லது நீங்கள் மீண்டும் ஒரு மாதம் தாமதப்படுத்தவுள்ளீர்களா?" என வெறுப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 30ஆம் தேதி வரையில் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் ஓலாவின் டெலிவிரிகள் அக்டோபர் 25ஆம் தேதியில் இருந்து நவம்பர் 25ஆம் தேதி வரையில் நடைபெறும் என எதிர்பார்த்தோம்.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

இந்த தாமதத்தை தவிர்க்க முடியவில்லை என முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது. அந்த மெயிலில், இதற்கு தாங்கள் வருந்துவதாகவும், முடிந்தவரை டெலிவிரிகளை விரைவாக துவங்க உற்பத்தி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான இறுதி தொகையை செலுத்துவதற்கான இணைய ஜன்னலை கடந்த நவ.10ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் திறந்தது. மேலும் அதே தினத்தில் தான் டெல்லி, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களில் டெஸ்ட் ட்ரைவ்கள் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து நமது சென்னை, மும்பை, ஹைதராபாத், கொச்சி மற்றும் புனே ஆகிய 5 நகரங்களில் நவ.19ஆம் தேதியில் இருந்து டெஸ்ட் ட்ரைவ் ஆரம்பிக்கப்பட்டது.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படுகின்றன. இதில் எஸ்1 வேரியண்ட்டின் ரேஞ்ச் 121கிமீ என்றும், இதனை காட்டிலும் சற்று விலைமிக்க எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகப்பட்சமாக 180கிமீ தொலைவிற்கு செல்லலாம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.

20,000ஐ கடந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ்!! டெலிவிரியை எதிர்நோக்கி வாடிக்கையாளர்கள்!

நார்மல், ஸ்போர்ட் & ஹைப்பர் என்ற மூன்று விதமான ரைடிங் மோட்களுடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு-சார்ந்த செயல்பாட்டு அமைப்புடன் பெரிய அளவிலான திரையினை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் கொண்டுள்ள ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களில் செயலி கண்ட்ரோல், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி பாயிண்ட் மற்றும் இருக்கைக்கு அடியில் பெரிய சேமிப்பிடம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric has completed 20,000 test rides for its S1 and S1 Pro electric scooters.
Story first published: Friday, December 3, 2021, 2:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X