ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்டுவரும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை குஷியாக்கக்கூடிய அந்த தகவலினை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை வேகமாக பெருகிவரும் தற்போதைய சூழலில் புதிய புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சந்தையில் களமிறங்கி வருகின்றன. இந்த வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூலம் எலக்ட்ரிக் வாகன வணிகத்தில் காலடி எடுத்து வைத்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத்திற்கு முன்னதாகவே இவற்றின் மீது எதிர்பார்ப்புகள் அதிக எழ ஆரம்பித்ததால், முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில மணிநேரத்தில் ஏகப்பட்டோர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய குவிந்தனர்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

இதன் விளைவாக வெப்சைட் சர்வர் பழுதாகி முன்பதிவுகள் சில மணிநேரத்திற்கு தடைப்பட்டு போனதாக நமது செய்திதளத்தில் கூட செய்தி வெளியிட்டு இருந்தோம். முன்பதிவுகள் ஒருபக்கமாக ஒவ்வொரு கட்டமாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுப்பக்கம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நமது தமிழகத்தில் அதன் முதல் தொழிற்சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் தீவிரமாக இருந்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

இதனால் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாகவே ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள ஓலாவின் தொழிற்சாலையில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகின. இருப்பினும் குறைக்கடத்திகள் உலகளாவிய பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு இ-ஸ்கூட்டர்களை தயாரிக்க முடியாமல் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தத்தளிக்க ஆரம்பித்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

இது நேரடியாக ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளில் தாமதத்தை ஏற்படுத்தின. இதற்கிடையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ரைடுகளை சென்னை உள்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஓலா துவங்கியிருந்தாலும், நெட்டிசன்கள் பலரது கேள்வி, "டெலிவிரி எப்போது துவங்கும்?" என்பதாகவே இருந்தது. ஏனெனில் அந்த அளவிற்கு நாட்டில் பலர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்துள்ளனர்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

ஆனால் குறைக்கடத்திகளின் தேவையால் எஸ்1 ஸ்கூட்டர்களின் டெலிவிரியை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தொடர்ந்து தாமதப்படுத்தியவாறே இருந்தது. இந்த நிலையில் தற்போது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் வருகிற டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து துவங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

இதுகுறித்த பாவிஷ் அகர்வாலின் டுவிட்டர் பதிவில், "வாகனம் புறப்பட்டது" என இந்தி மொழியில் குறிப்பிட்டு, பதிவிடப்பட்டு இருந்த 51 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவில் வண்ண நிறங்களில் ஓலா இ-ஸ்கூட்டர்கள் காட்சி தருகின்றன. முழுவதுமாக ஓலாவின் ஓசூர் தொழிற்சாலையில் காடசிப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடியோவின் இறுதியில், டெலிவிரிக்கான ஸ்கூட்டர்கள் லாரி ஒன்றில் ஏற்றப்படுவதை காண முடிகிறது. இதனுடன் நமக்கு ஓலாவின் தொழிற்சாலையில் இருந்து சில ஸ்பை படங்களும் கிடைத்துள்ளன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

அதில் ஒன்றினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த படங்களில் டெலிவிரிக்கு தயாரான நிலையில், கவர் போர்த்தப்பட்டு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொழிற்சாலைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ மட்டுமல்லாமல், ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டர்களின் டெலிவிரிகள் வருகிற டிச.15ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட உள்ளதை புக் செய்த வாடிக்கையாளர் ஒருவரும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

அதாவது, தனக்கு முதல் 50 வாடிக்கையாளர்களில் ஒருவராக எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்று வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சித்தார் ரெட்டி என பெயர் கொண்ட இந்த வாடிக்கையாளர் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது அவரது டுவிட்டர் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக பாவிஷ் அகர்வால், கடந்த டிச.11ஆம் தேதி, "தயாரிப்பு வரிசை முழு வேகத்தில் இயங்குவதை பார்ப்பதை காட்டிலும் அழகான ஒன்று வேறு எதுவுமில்லை" என பதிவிட்டிருந்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

இந்த பதிவின் மூலம், ஓலாவின் தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதை அறிய முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது டெலிவிரி தேதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிச.15 என்பது மிக அருகாமையில் வந்துவிட்டது. ஆதலால் ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்துள்ளோர், தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி பெற தயாராகுங்கள்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்!! தொழிற்சாலையில் டெலிவிரிக்கு ரெடியாக ஸ்கூட்டர்கள்!

சமீபத்தில், எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ரைடுகளில் வெற்றிக்கரமாக 20,000 என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக இவி டெஸ்ட் ரைடுகளை மேற்கொண்டுள்ள நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் விளங்குவதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போதைக்கு, ஒரே நாளில் 10,000 டெஸ்ட் ரைடுகளை நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஓலாவின் நோக்கங்களுள் ஒன்றாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric scooter delivery to start from 15th december details
Story first published: Tuesday, December 14, 2021, 1:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X