18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் அனைத்து அம்சங்களுடன் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் களமிறக்க உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ள ரேஞ்ச் என்பது இப்போதுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள விஞ்சும் வகையில் இருக்கும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வாடகை கார் சேவை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஓலா இருந்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்க உள்ளது. ஓசூர் அருகே உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன ஆலையை அந்நிறுவனம் அமைத்து வருவது தெரிந்ததே.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் விபரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் இந்த ஸ்கூட்டரை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு மேலும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சார்ஜ் மூலமாக 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை இந்த ஸ்கூட்டர் வழங்கும்.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதனை வைத்து பார்க்கும்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டரியை ஒரு மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரிகிறது.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் உள்ளிட்ட சந்தையில் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களைவிட ஓலாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக தூரம் பயணிக்கும் திறனை பெற்றிருப்பதோடு, மிக குறைவான நேரத்தில் சார்ஜ் செய்யும் வாய்ப்பையும் வழங்கும்.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதுதவிர்த்து, தனது வாடிக்கையாளர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் சார்ஜ் செய்வதற்கு ஏதுவாக, ஹைப்பர்சார்ஜ் நெட்வொர்க் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் செல்லலாம்... கலக்கப்போகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வரும் ஜூலையில் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் இருந்து முதல் ஓர் ஆண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் 5,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்துவிடுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதனால், மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தனது திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பு காட்டி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
OLA has revealed that their all new electric scooter can be charged to 50 percent in just 18 minutes and this will give a 75 kms range.
Story first published: Saturday, April 24, 2021, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X