வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

சுமார் ரூ.1,100 கோடி மதிப்பிலான ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த இரு நாட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் தொடர்ந்து பார்ப்போம்.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

கடந்த சுதந்திர தினத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் மிக பெரிய வெற்றியை அடையும் என்பது போல தான் தற்போதுவரையில் தெரிகிறது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

இந்த நிலையில் கடந்த இரு நாட்களில் ரூ.1,100 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தங்களது நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே அதற்கான முன்பதிவுகள் துவங்கின.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

வெறும் ரூ.500 என்கிற டோக்கன் தொகையுடன் இந்த முன்பதிவு துவங்கப்பட்டதால், எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் குவித்தனர். எந்த அளவிற்கு என்றால், துவங்கப்பட்ட 24 மணிநேரத்தில் சுமார் 1 லட்ச ஓலா இ-ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நமது செய்தி தளத்தில் கூட தெரிவித்திருந்தோம்.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

அதன்பின் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு முன்பதிவுகள் மேலும் குவித்தன. இதனால் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் சில பிரச்சனைகளை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி கொள்ளப்பட்டன.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

பின்னர், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கப்பட்டது. முதல் நாளில், அதாவது செப்.15ஆம் தேதி ரூ.600 கோடி மதிப்பிலான தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

அதாவது அந்த நாளில் ஒவ்வொரு வினாடிக்கும் நான்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த செப்டம்பர் 16ஆம் தேதி ரூ.500 கோடி மதிப்பிலான ஓலா இ-ஸ்கூட்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

இதனை இன்று (செப்.17) டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட பாவிஷ் அகர்வால், ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு மீண்டும் வருகிற நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். இதில் இருந்து இந்த முன்பதிவு எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என தெரிகிறது. எனவே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்ய விரும்புவோர் இப்போதே முந்திக்கொள்ளுங்கள்.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் அதன் எஸ்1 ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நமது தமிழகத்தில் கொண்டுள்ள தொழிற்சாலையில் பகுதி வாரியாக தயாரிப்பு பணிகளை துவங்கி வருகிறது. ஓலா தொழிசாலையில் தயாரிக்கப்பட்ட முதல் எஸ்1 இ-ஸ்கூட்டரை அந்த சமயத்தில் பார்த்திருந்தோம்.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

ஓலாவின் இந்த தமிழக தொழிற்சாலை தான் உலகிலேயே மிக பெரிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையாகவும், பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்களே பணியாற்றவுள்ளதால் பெண் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையாகவும் விளங்கவுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து வருகிறது.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவுகள் குவிந்து வருவதை பார்த்தால், இந்த மாதிரியான தொழிற்சாலை தான் சரிப்பட்டு வரும். ஏனெனில் ஓலாவின் இந்த தொழிற்சாலை வருடத்திற்கு சுமார் 2 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய சந்தைக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளுக்கும் தனது இ-ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனத்தால் கொண்டு செல்ல முடியும்.

வெறும் 2 நாட்களில் ரூ.1,100 கோடி கல்லா கட்டியுள்ள ஓலா!! ஒவ்வொரு வினாடிக்கும் 4 இ-ஸ்கூட்டர்கள் புக் ஆகிறதாம்!

ஓலா எஸ்1 மாடலின் விலை ரூ.1 லட்சமாகவும், எஸ்1 ப்ரோவின் விலை ரூ.1.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளே ஆகும். ஆன் ரோடு விலை மாநிலத்திற்கு மாநிலம், அரசாங்கங்கள் வழங்கும் மானியத்தை பொறுத்து வேறுபடுகிறது. இந்த வகையில் குஜராத் அரசாங்கம் அதிக மானியத்தை வழங்கி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric S1, S1 Pro electric scooters worth ₹1,100 crore sold in two days.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X