ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

இந்தியாவிலேயே இவி டெஸ்ட் ரைடில் புதிய முயற்சியாக இந்தியா முழுவதும் டெஸ்ட் ரைடுகளை ஓலா நிறுவனம் வழங்க படிப்படியாக துவங்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

வேகமாக வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூலம் தனது இவி மொபைலிட்டி பயணத்தை தொடங்கியது. எஸ்1 & எஸ்1 ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

மெல்லிய தோற்றத்தில் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்துவரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக குவிந்தன. தற்சமயம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த முன்பதிவுகள் மீண்டும் அடுத்த டிசம்பர் மாத மத்தியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

முதலாவதாக முன்பதிவு செய்தவர்களுக்கு ஸ்கூட்டர் டெலிவிரி செய்யப்படுவது இந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவிரி செய்வதை கடந்த நவ.10ஆம் தேதி ஓலா நிறுவனம் துவங்கியது. ஆனால் அப்போது சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே டெஸ்ட் ரைடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

இந்த குறிப்பிட்ட நகரங்களில் முதலாவதாக பெங்களூர், டெல்லி, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்டவை அடங்கின. அதன்பின் இந்த நகரங்களில் நமது சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்கள் சேர்க்கப்பட்டன. இதனை வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஓலா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

இதன்படி இந்தியாவில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நகரங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ரைடுகள் அடுத்த டிசம்பர் மாத பாதிக்குள் துவங்கப்பட உள்ளன. இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி அருண் சர்தேஷ்முக் பேசுகையில், டெஸ்ட் ரைடுகளுக்கு வாடிக்கையாளர்களின் பதில் அபரிமிதமாக நேர்மறையாக கிடைத்து வருகிறது. ஓலா எஸ்1 ஸ்கூட்டருக்கான அவர்களின் வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் டெஸ்ட் ரைடுகளை மேற்கொள்கின்றனர். மற்றும் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும், பிரிவிலேயே சிறந்த வடிவமைப்பு, செயல்திறன், தொழிற்நுட்பம் மற்றும் பயண தரம் ஆகியவற்றை விரும்புகின்றனர். வரும் வாரங்களில் டெஸ்ட் ரைடுகளை வழங்குவதை அதிகப்படுத்த அளவிட்டுள்ளோம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

மேலும் டிசம்பர் நடுப்பகுதிக்குள் ஒவ்வொரு வாடிக்கையாளரும் சோதனை சவாரிகளை அணுகுவதை உறுதிச்செய்ய, இந்தியா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கியுள்ளோம். இதுவே இதுவரை இல்லாத வகையில் வேகமாக விரிவுப்படுத்தப்படும் டெஸ்ட் ரைடு ஆகும். எங்கள் நேரடி நுகர்வோர் கான்செப்ட்டால் சில்லறை வாகன விற்பனையில் இந்த புரட்சி சாத்தியமாகியுள்ளது என்றார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

அடுத்தக்கட்டமாக கோயம்புத்தூர், திருப்பூர், திருவனந்தபுரம், கோழிக்கோடு, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஷ்வர், வதோதாரா, நாக்பூர், சூரத், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் வருகிற நவ.27ஆம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் எலக்ட்ரிக் இருசக்கர தயாரிப்பிற்கு புதியது மற்றும் அதன் தயாரிப்புகளும் சந்தைகளுக்கு புதியது என்பதால் இந்த டெஸ்ட் ரைடுகளின் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து முதன்முறையாக கிடைத்துவரும் கருத்துகளை பொறுத்தே இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். இதனால் தான் டெஸ்ட் ரைடு விஷயத்தில் ஓலா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே அவற்றை டெஸ்ட் செய்து பார்க்க முடியும். பார்க்கும் எவர் ஒருவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களுக்கு கவர்ச்சிக்கரமான 10 விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்1 ப்ரோ என்பது எஸ்1 மாடலை காட்டிலும் சற்று கூடுதல் விலைமிக்க வெர்சனாகும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் இருக்கைக்கு அடியில் கிட்டத்தட்ட 2 முழு ஹெல்மெட்கள் வைக்கும் அளவிற்கு 36 லிட்டர் கொள்ளவில் நன்கு பெரிய இட வசதியை ஓலா நிறுவனம் வழங்கியுள்ளது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் அதிகப்பட்ச ரேஞ்ச் 181 கிமீ (எஸ்1 ப்ரோ) ஆகும். டாப்-ஸ்பீடு மணிக்கு 115kmph ஆகும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் ரைடு செய்ய தயாராகுங்கள்!! உங்களது பகுதியை தேடி கொண்டுவரப்படுகிறது!

சஸ்பென்ஷனுக்கு மோனோ-ஷாக் , பிரேக்கிங் பணியை கவனிக்க முன்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக்குகள் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நன்கு அகலமான டயர்களை ஓலா நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நமது தமிழகத்தில் ஓலா நிறுவனம் நிறுவியுள்ள ‘எதிர்கால தொழிற்சாலை'-இல் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
OLA ROLL OUT PAN INDIA TEST RIDES. INDIA’S LARGEST EV TEST RIDE INITIATIVE.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X