அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பல்வேறான பேட்டரியில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களின் மூலம் அதன் எலக்ட்ரிக் இயக்க பிரிவை எதிர்காலத்தில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பயணிகள் வாகன பிரிவிலும் நுழைய ஓலா தயாராகி வருவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இதற்காக எலக்ட்ரிக் காரினை உருவாக்கும் பணியிலும் இந்த நிறுவனம் ஈடுப்பட உள்ளது.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தின் போது அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற இரு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், எஸ்1-ஐ காட்டிலும் மலிவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் திட்டத்தில் ஓலா உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியான தகவலுக்கு, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால், "ஆம், அடுத்த ஆண்டில்" என பதிலளித்துள்ளார். எலக்ட்ரெக்.கோ என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவில், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பணியிலும் ஓலா ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

இதனையும் சேர்த்துதான் பாவிஷ் அகர்வால் ஆம் என உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அடுத்த 2022ஆம் ஆண்டில் முதல் ஓலா எலக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்தையும் எதிர்பார்க்கலாம். ஆனால் இதற்கு முன்னதாக, எஸ் என்ற பெயரில் ஓலாவின் புதிய மலிவான இ-ஸ்கூட்டரே முதலாவதாக அறிமுகமாகும் என தெரிகிறது.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

ஏனெனில் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ பெயர்கள் பதிவு செய்யப்பட்ட போதே எஸ் என்ற பெயரையும் தனது எதிர்கால தயாரிப்பிற்காக ஓலா பதிவு செய்து கொண்டுள்ளதாக இணையத்தில் வெளியாகிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தோற்றத்தை பொறுத்தவரையில் தற்போதைய எஸ்1 மாடல்களுக்கும், புதிய எஸ் மாடலுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

ஆனால் விலையினை குறைவாக நிர்ணயிக்க வேண்டி சில வசதிகளை புதிய எஸ் இ-ஸ்கூட்டரில் தயாரிப்பு நிறுவனம் தவிர்க்கும். இந்த வகையில் முக்கியமாக எஸ்1 ஸ்கூட்டர்களின் 3kWh பேட்டரி தொகுப்பிற்கு மாற்றாக, குறைந்த மதிப்பிலான பேட்டரி தொகுப்பு பொருத்தப்படலாம். இதனால் எலக்ட்ரிக் மோட்டாருக்கு கிடைக்கும் ஆற்றல் குறையும்.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

இதன் விளைவாக ஸ்கூட்டரின் செயல்திறன் குறைவதோடு, சிங்கிள் சார்ஜில் இயங்கும் தூரமும் குறையும். எங்களுக்கு தெரிந்தவரையில் புதிய ஓலா எஸ் மாடலின் ரேஞ்ச் 100கிமீ ஆக இருக்கலாம். அதாவது இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி கொண்டு அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு இயங்கலாம். இதன் டாப் ஸ்பீடு 75-80kmph என கொண்டுவரப்படலாம்.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

இருப்பினும் இதுகுறித்த விபரங்களை இப்போதே ஆராய்வது சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது. பேட்டரியின் திறனை குறைப்பது மட்டுமின்றி, தொடுத்திரை, க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்பீக்கர்கள் மற்றும் சாவியில்லா ஸ்டார்ட் போன்ற ப்ரீமியம் தரத்திலான வசதிகளும் இந்த புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தவிர்க்கப்படலாம்.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

இவற்றுடன் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்கும் பகுதியை திறத்தல்/ மூடலுக்கு ரிமோட், அருகாமையில் இருந்தப்படி ஸ்கூட்டரை லாக்/ அன்லாக் செய்யும் வசதி, குரல் கட்டுப்பாடு, வைபை இணைப்பு மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட அம்சங்களும் புதிய ஓலா எஸ்-இல் எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

அதேபோல், தற்போதைய ஓலா எஸ்1 மாடல்களில் 12-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் புதிய மாடலில் எளிமையாக இரும்பு சக்கரங்களே வழங்கப்படலாம். இத்தகைய விலை குறைப்பு திருத்தியமைப்புகளால் ஓலா எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. தற்சமயம் ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சம் என்ற அளவில் உள்ளது.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

இது மாநில அரசுகள் வழங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படுகிறது. புதிய ஓலா எஸ் மாடலின் விலையினை ரூ.70- 80 ஆயிரம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். இத்தகைய விலையினால் இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடியாக ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிட்டர் போன்ற பிரபலமான பெட்ரோல் ஸ்கூட்டர்களே போட்டியாக விளங்கலாம்.

அனைவரும் வாங்கக்கூடிய மலிவான இ-ஸ்கூட்டரை உருவாக்கும் ஓலா!! எலக்ட்ரிக் பைக்கும் தயாராகிறதாம்!

தற்போதைய எஸ்1 ஸ்கூட்டரில் 2.98kWh பேட்டரி தொகுப்பும், எஸ்1 ப்ரோவில் சற்று பெரிய 3.97kWh பேட்டரி தொகுப்பும் பொருத்தப்படுகிறது. இவை இரண்டிலும் எலக்ட்ரிக் மோட்டார் வெளியிடும் அதிகப்பட்ச ஆற்றல் அளவுகள் 8.5 கிலோவாட்ஸ் (11.4 பிஎச்பி) மற்றும் 58 என்எம் ஆக உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric to launch new electric scooter at more affordable price details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X