ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு... நேரில் விசிட் அடித்த சிஇஓ பவிஷ் அகர்வால்

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது குறித்த படங்களை அந்நிறுவனத்தின் சர்வதேச விற்பனைப் பிரிவு தலைவர் யங்சங் கிம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

நம் நாட்டின் வாடகை கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஓலா நிறுவனம் விரைவில் மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்க உள்ளது தெரிந்ததே. முதலாவதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

வரும் ஜூலை மாதம் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில், தனது மின்சார வாகனத் தயாரிப்புக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொழிற்பேட்டையில் மிகப்பெரிய தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

இந்த புதிய வாகன ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

இந்த நிலையில், ஆலை கட்டுமானப் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் நேற்று (மே 2) நேரில் பார்வையிட்டுள்ளார். அப்போது மகிழ்ச்சியுடன் அங்கிருந்து பல போஸ்களுடன் படங்களை எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான படங்களை ஓலா நிறுவனத்தின் சர்வதேச விற்பனைப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யங்சங் கிம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

முகப்பில் ராட்சத இரும்புத் தூண்கள் மற்றும் உத்திரங்களை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருவது இந்த படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. மேலும், ஆலை கட்டுமானப் பணிகளுக்கு தக்கவாறு நிலம் முழுமையாக சமன் செய்யப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

அடுத்த சில மாதங்களில் இந்த ஆலை கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆலையில் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதுடன் ஆண்டுக்கு 2 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவுப்பெற்றவுடன் ஆண்டுக்கு 10 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனை இந்த ஆலை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு வினாடிகளுக்கு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும்.

பர்கூரில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலைப் பணிகள் விறுவிறு

இந்தியா மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric Vehicle Plant Construction In Full Swing in Krishnagiri, Tamilnadu.
Story first published: Monday, May 3, 2021, 15:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X