Just In
- 9 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 12 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 14 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...
மிகவும் பழைய மாடல் பல்சர் 180 மோட்டார்சைக்கிளை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மின்சார வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றனர். இப்பைக் பற்றிய மேலும் முக்கியமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

இந்திய இளைஞர்களின் மிகவும் பிரியமான மோட்டார்சைக்கிள்களில் பஜாஜ் பல்சரும் ஒன்று. இந்த பைக்கை மையப்படுத்தி தமிழ் திரையுலகில் 'பொல்லாதவன்' எனும் திரைப்படமே வெளியாகியிருக்கின்றது. அந்தளவிற்கு மிகவும் புகழ்வாய்ந்த பைக்காக பஜாஜ் பல்சர் இந்தியாவில் இருக்கின்றது. இத்தகைய புகழ்வாய்ந்த பைக்கையே ஓர் இளைஞர் மின்சார வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார்.

இது ஓர் பழைய தலைமுறை பல்சர் 180 மாடல் ஆகும். இதனையே பேட்டரியால் இயங்கும் வாகனமாக மாற்றியிருக்கின்றார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர். பல்சர் 180 மின்சார பைக்காக மாறியதுகுறித்த வீடியோவை இளைஞர்கள் கிரியேட்டிவ் இடிசி எனும் யுட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கின்றனர். பைக்கில் புதிய அவதாரம் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை இவ்வீடியோ மிக துள்ளியமாக விளக்குகின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!

இது ஓர் பயனற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த பைக்காகும். எனவே, இப்பக்கைக் கொண்டு மின்சார பைக்காக மாற்ற திட்டமிட்ட இளைஞர்கள், அதன் எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றை நீக்கினர். தொடர்ந்து, அவை இருந்த இடத்தில் இரு உலோக சட்டங்களை நிறுவினர்.

முன்னதாக, பைக்கின் பின் வீலை நீக்கிய இளைஞர்கள், அதற்கு பதிலாக மின் மோட்டாருடன் இணைக்கப்பட்ட வீலை அவ்விடத்தில் பொருத்தினர். இதைத்தொடர்ந்தே, அந்த மின் மோட்டாருக்கு தேவையான பேட்டரியை அந்த இரு உலோக சட்டங்களில் அவர்கள் நிலை நிறுத்தினர்.

இதற்கிடையில், 200 லித்தியம் அயன் பேட்டரிகள் அடுக்கடுக்காக இணைக்கப்பட்டன. இதுவே, மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும். இதனை ஓர் அலுமினிய பெட்டகத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஒயரிங் செய்து, அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீர் புகா வண்ணம் பேட்டரியைச் சுற்றிலும் பிளாஸ்டிக்கால் கவர் செய்யப்பட்டிருக்கின்றது. இது பேட்டரியையும், ஒயரிங்கையும் நீண்ட வருடங்களுக்கு பாதுகாக்கும். இதேபோன்று, மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட பின் வீல் சீராக இயங்குவதற்கு ஏதுவாக பைக்கின் ஸ்விங்கார்ம் (வீலை பொருத்தப்படும் இடம்) பகுதியில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதன் பின்னரே அந்த இடத்தில் டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட வீல் பெருத்தப்பட்டது. தொடர்ந்து, பேட்டரியின் அளவு மற்றும் சார்ஜ் போன்ற பிற தகவல்களை வழங்கும் வகையில் சிறிய எல்சிடி திரை ஒன்றையும் அவர்கள் பொருத்தியிருக்கின்றனர்.

எரிபொருள் அளவைக் காண்பிக்கும் அளவுகாட்டியை நீக்கிவிட்டு, அது இருந்த இடத்திலேயே இத்திரை பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாற்றத்தை மிகக் குறைந்த நேரத்திலேயே அவர்கள் செய்துவிட்டனர். இதனால், பஜாஜ் பல்சர் 180 தற்போது மின்சார பைக்காக மாறியிருக்கின்றது. இதனை உச்சபட்சமாக மணிக்கு 70 கிமீ வரை இயக்க முடியும்.
இந்த திறனை வெளியேற்றுவதற்கு ஏற்ப 2000வாட் மின் மோட்டாரே பின் வீலில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த முழுமையான மாற்றத்திற்கான செலவு பற்றிய தகவலை இளைஞர்கள் வெளியிடவில்லை. ஆனால், இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 110 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்ற தகவலை மட்டுமே அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

மின்சார பைக்காக பல்சர் 180 மாறியிருப்பதால் இதில் க்ளட்ச் வேலை செய்யாது. மேலும், இதில் கியர்பாக்ஸும் இருக்காது. புதிதாக ஆன்-ஆஃப் ஸ்விட்ச் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரியில் இருந்து மின் மோட்டாருக்கு மின்சாரத்தைச் செலுத்த உதவும்.