Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புல்லட் மீது ரொம்ப ஆசை! மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
புல்லட் பைக் மீதிருக்கும் ஆதீத ஆசை காரணமாக அப்பைக்கை மூத்த குடிமகன் ஒருவர் மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். இப்பைக் பற்றிய சுவாரஷ்ய தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆண், பெண் பாராமல் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்களான. இதேபோன்று, இளைஞர்களை மட்டுமின்றி முதியவர்களையும் கவர்ந்த வாகனமாக அவை இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் மீது அளவுகடந்த பிரியம் கொண்ட ஓர் முதியவர் அப்பைக்கை மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். புல்லட் பைக் மாற்றியமைத்ததுகுறித்த வீடியோவை என்சிஆர் பைக்கர்ஸ் எனும் யூட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் வாயிலாகவே இப்படி ஓர் மாற்றத்தை புல்லட் பெற்றிருப்பது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

பொதுவாக, வாகன மாடிஃபிகேஷன் என்பது உருவத்தையும், ஸ்டைலையும் மட்டுமே மாற்றம் செய்கின்ற வகையில் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற ஓர் மாடிஃபிகேஷனையே ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கும் சந்தித்திருக்கின்றது. ஆனால், இந்த மாடிஃபிகேஷன் சற்று விநோதமானதாக காட்சியளிக்கின்றது.

அதாவது, பைக்கின் சில பாகங்கள் மூன்று சக்கர வாகனமாக மாற்றுவதற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பெட்ரோல் டேங்கை ஒட்டியவாறு முன்பக்கத்தில் இருக்கும் ஹேண்டில் பார் நீக்கப்பட்டு பக்கவாட்டு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

அதாவது, முன் வீல் மற்றும் ஹேண்டில் பார் ஆகியவற்றைத் தவிர்த்து பிற அனைத்து பாகங்களும் வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த புதிய உருவத்திற்காக பைக்கின் இருக்கை, பின் பக்க வீல் மற்றும் மட்குவார்ட் ஆகியவை நீக்கப்பட்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து, பின் பக்கத்தில் புதிதாக இரு ஸ்போக் வீல் கொண்ட சக்கரங்கள் மற்றும் இருவர் அமர்கின்ற வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கின்ற வகையில் மேற்கூரையும் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இவற்றால் பார்ப்பதற்கே விநோதமான வாகனமாக ராயல் என்ஃபீல்டு புல்லட் மாறியிருக்கின்றது.

இத்தகைய விநோத உருவம் கொண்டிருந்த காரணத்தினாலயே யுட்யூபர் ஒருவர் பைக்கை நிறுத்துமாறுகூறி, அதனை வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவே தற்போது என்சிஆர் பைக்கர்ஸ் தளத்தின் வாயிலாக வைரலாகி வருகின்றது. மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஓர் 350 சிசி திறன் கொண்ட ஏபிஎஸ் மாடல் ஆகும்.

இதனையே மூத்த குடிமகன் ஒருவர் தனக்கான பிரத்யேக வசதிகள் கொண்ட மூன்று சக்கரங்கள் கொண்ட வாகனமாக மாற்றியமைத்திருக்கின்றார். இதன் கியர் அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அதவாது கால்களால் மாற்றும் வகையில் இருந்த கியர், முதியவர் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கியர் லிவர் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்க மாற்றங்களை பைக் சந்தித்திருக்கின்றது.
Image Courtey: NCR Bikerz
இதனால் ட்ரைக் ரக வாகனமாக அது மாறியிருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமான செலவு ரூ. 3 லட்சம் என கூறப்படுகின்றது. இதில் பைக்கின் விலை ரூ. 1.75 லட்சம் ஆகும். மாடிஃபிகேஷனுக்கான செலவு ரூ. 1.25 லட்சம் ஆகும். உருவ மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் இவர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், வழக்கமான புல்லட் வழங்கும் திறனிலேயே இந்த மூன்றுசக்கர புல்லட் பைக்கும் காட்சியளிக்கின்றது.