100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத் தாண்டவமாட்டம் ஆடி வரும்நிலையில் நாட்டில் புதிதாக 100 புதிய ஷோரூம்களை நூறு நாட்களில் பிரபல நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

தற்போது நாடே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது. இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாகன விற்பனை என்பது மிக மிகக் கடுமையாக குறைந்து காணப்படுகின்றது. இந்த மாதிரியான ஓர் சூழ்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று நூறு நாளில் நூறு புதிய ஷோரூம்களை திறந்து புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

பியாஜியோ நிறுவனமே நூறு நாளில் நூறு புதிய ஷோரூம்களை திறந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வாகனங்களுக்காகவே நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் புதிதாக ஷோரூம்களை திறந்திருக்கின்றது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

இரண்டு மற்றும் மூன்று சக்கரம் என தனது இரு ரக வாகனங்களுக்குமான ஷோரூம்களையே நிறுவனம் திறந்திருக்கின்றது. இந்த புதிய ஷோரூம்களின் வருகையால் தற்போது நாட்டில் பியாஜியோ ஷோரூம்களின் எண்ணிக்கை 725ஆக உயர்ந்துள்ளது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

இத்துடன் 1,100 டச்பாயிண்டுகளையும் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றது. வாடிக்கையாளர்களை தங்களுடைய தயாரிப்புகள் எளிதில் சென்றடையும் விதமாக இந்த விரிவாக்கம் பணியை மேற்கொண்டு வருவதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

தொடர்ந்து புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நடப்பாண்டின் தொடக்கத்தில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், எஸ்எக்ஸ்ஆர் 125 மாடலையும் இந்தியாவில் களமிறக்கும் பணியில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரை நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில் புதிதாக இரு மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியது. அபே இ-சிட்டி எஃப்எக்ஸ் மற்றும் அபே இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் ஆகிய மின்சார ஆட்டோரிக்ஷாக்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

இதுதவிர இன்னும் பிற புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. 2021ம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்துள்ள நிலையில், இதில் இருசக்கர வாகன விற்பனையில் 90 சதவீதம் வளர்ச்சியை நிறுவனம் சந்தித்திருப்பதாக பியாஜியோ தகவல் வெளியிட்டுள்ளது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலால் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்து வந்த நிறுவனம், தளர்வுகளினால் நல்ல டிமாண்டைப் பெற தொடங்கியது. ஆனால், தற்போது மீண்டும் பொதுமுடக்கம், விற்பனைச் சரிவு என இந்தியா வாகனச் சந்தை மிகக் கடுமையான கால கட்டத்தில் நுழைந்திருக்கின்றது.

100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிதாக 100 ஷோரூம்களை நிறுவனம் திறந்திருப்பது மிக துணிச்சலான நடவடிக்கை என இந்திய வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio Launches 100 Dealerships In 100 Days In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X