ஸ்டாண்ட் தேவைப்படா 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க மினிகார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு

மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டரை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பியாஜியோ தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகயுள்ளன.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பியாஜியோவும் ஒன்று. இந்நிறுவனமே தற்போது மூன்று சக்கரங்களால் இயங்கக் கூடிய ஸ்கூட்டரை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. எம்பி3 400 எச்பிஇ என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

எம்பி3 300 எச்பிஇ மற்றும் எம்பி3 500 எச்பிஇ ஆகிய மாடல்களில் ஏற்கனவே இந்த மூன்று சக்கர வாகனம் உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இதில் கூடுதல் தேர்வை வழங்கும் வகையில் எம்பி3 400 எச்பிஇ மாடலை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

எம்பி3 400 எச்பிஇ ஸ்கூட்டரில் 399 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 35.3 பிஎஸ் பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 37 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

இதுவே, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்பி3 300 எச்பிஇ, எம்பி3 500 எச்பிஇ ஸ்கூட்டருக்கும் புதிய எம்பி3 400 எச்பிஇ ஸ்கூட்டருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ஆகும். இதுமட்டுமின்றி, இன்னும் சில மாற்றங்களை நிறுவனம் செய்திருக்கின்றது.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

அதிக எஞ்ஜின் சத்தம் மற்றும் அதிர்வு ஆகியவற்றை குறைத்திருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. ஆகையால், இரு சகோதரர்களைவிட எம்பி3 400 எச்பிஇ சற்று குறைந்த அதிர்வு மற்றும் ஒலியையே வெளியேற்றும். தொடர்ந்து, செல்போன் இணைப்பு போன்ற சிறப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

இந்த இணைப்பின் வாயிலாக செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இசை ஆகியவற்றை ஸ்கூட்டரின் திரை வாயிலாக நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், அதிக இட வசதியை அளிக்கும் வகையில் பெரிய ஒற்றை இருக்கை இதில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

இதில், இருவர் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். தொடர்ந்து, இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டோரேஜும் பெரியதாகவே உள்ளது. இரு ஹெல்மெட்டுகளை அதில் வைத்துக் கொள்ள முடியும். இதனை திறக்கும் வசதியை செல்போனில் வழங்கியிருக்கின்றது, பியாஜியோ.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

அதாவது, பியாஜியோ வழங்கும் இணைப்பு தொழில்நுட்பத்தின் வாயிலாக செல்போனையும், ஸ்கூட்டரையும் இணைக்கையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஸ்மார்ட்போன்கள் வாயிலாகவே கன்ட்ரோல் செய்ய முடியும். அதில், ஒன்றே இந்த இருக்கையை திறக்கும் வசதி.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

மேலும், இது ஓர் மூன்று சக்கர வாகனம் என்பதால் இதற்கு தனியாக ஸ்டாண்ட் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகையால், டிராஃபிக்கில் நிற்கும்போதுகூட ரெண்டு கால்களையும் கூலாக ரெஸ்ட் பேடில் வைத்தவாறு நிற்கலாம். தொடர்ந்து, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

இதுதவிர, அனைத்து வீல்களிலும் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், சொகுசான பயணத்தை மட்டுமல்ல பாதுகாப்பான பயணத்தையும் இதில் மேற்கொள்ள முடியும். இதுமாதிரியான சிறப்பு வசதிகளுடனேயே புதிய எம்பி3 400 எச்பிஇ உருவாகியிருக்கின்றது.

ஸ்டாண்ட் தேவைப்படாத 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க கார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு!!

இதனை இரு விதமான வேரிண்டுகளில் விற்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வழக்கமான மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், வழக்கமான வேரியண்டிற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 10,994 (இந்திய மதிப்பில் ரூ. 8.04 லட்சம்) விலையும், ஸ்போர்ட் வேரியண்டிற்கு 11,238 ((இந்திய மதிப்பில் ரூ. 8.22 லட்சம்) அமெரிக்க டாலர்கள் என்ற விலையிலும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio Unveiled 2021 MP3 400 HPE Three Wheeled Scooter. Read In Tamil.
Story first published: Friday, May 21, 2021, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X