போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வாயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

போர்ஷே நிறுவனத்தின் இரு இ-சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே, புதிதாக இரு இ-சைக்கிள்களை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான போர்ஷே டேகான் க்ராஸ் டூரிஸ்மா காரின்மீது மவுண்ட் செய்தவாறு இந்த இ-சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

போர்ஷே விற்பனைச் செய்து வரும் வாகனங்களிலேயே இது மிகக் குறைந்த விலைக் கொண்ட வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ஸ்போர்ட் என பெயரிடப்பட்டிருக்கும் இ-சைக்கிளுக்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 10,700 டாலர்களும், க்ராஸ் என பெயர் இ-சைக்கிளுக்கு 8,549 அமெரிக்க டாலர்களும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

இந்திய மதிப்பில் பார்த்தோமேயானால், ஆரம்பநிலை மாடலாக விற்கப்படும் க்ராஸ் இ-சைக்கிளின் விலை ரூ. 6.23 லட்சமாக இருக்கின்றது. இதைய குறைந்த விலை என்று கூறினீர்கள் என்று கேட்க தோன்றலாம். நாங்கள் முன்னதாக குறிப்பிட்டதைப் போலவே போர்ஷே விற்பனைச் செய்து வரும் வாகனங்களிலேயே இதுவே குறைந்த விலையுடைய வாகனங்களாக இருக்கின்றன.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

எனவேதான் இதனைக் குறைந்த விலை வாகனம் என மேலே குறிப்பிட்டிருக்கின்றோம். இருப்பினும், இந்த இ-சைக்கிள் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சில பட்ஜெட் கார்களின் விலையைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

மிக சமீபத்தில் அறிமுகமான நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் கார்களைக் காட்டிலும் இந்த இ-சைக்கிளின் விலை மிக அதிகமாக இருக்கின்றது. இவ்விரு கார்களும் ரூ. 5.49 லட்சம் என்ற மிக குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

போர்ஷே ஸ்போர்ட் இ-பைக்:

இந்த மின்சார சைக்கிளில் போர்ஷே நிறுவனம் ஷிமனோ இபி8 மோட்டாரைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. இத்துடன், ஷிமனோ கியர் ஷிப்டர்களும் இந்த இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

தொடர்ந்து, மகுரா உயர்-செயல் திறன் கொண்ட பிரேக், சிறப்பு ஹேண்ட்லிங் வசதிக் கொண்ட ஹேண்டில் பார்க்ள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், சூப்பர் நோவா நிறுவனத்தின் எம்99 எல்இடி லைட், ஹேண்டில்பார் ஸ்டெம் மற்றும் சிறந்த ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்ட சீட் உள்ளிட்டவையும் இந்த இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

போர்ஷே க்ராஸ்:

இந்த இ-சைக்கிளிலும் ஷிமனோ மின் மோட்டார்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், மகுரா-எம்டி ட்ரெய்ல் உயர்-செயல் திறன் கொண்ட பிரேக், ஹீட் ரெசிஸ்டண்ட் டிஸ்க்குகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் க்ராஸ் மாடல் இ-சைக்கிளில் போர்ஷே வழங்கியிருக்கின்றது.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

இதுதவிர, இந்த இ-சைக்கிளில் ஆஃப்-ரோடுகளைச் சமாளிக்கக் கூடிய பல்வேறு சிறப்பு வசதிகளையும் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. தொடர்ந்து, வண்ண திரை, கார்பன் ஃப்ரம், அதிக ரேஞ்ஜை வெளிப்படுத்தக் கூடிய பேட்டரி என பல்வேறு அதிக திறன் கொண்ட கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

போர்ஷேவின் இரு இ-சைக்கிள்கள் அறிமுகம்... இதோட விலைய கேட்டு வயடைத்த மக்கள்... கைகர் காரைவிட அதிக விலை!

எனவேதான், இந்த சைக்கிள்களின் விலை மிக விலையுயுர்ந்தவையாக காட்சியளிக்கின்றன. ஆகையால், விலைக்கேற்ப அதிக பிரீமியம் வசதிகளை இவ்விரு இ-சைக்கிள் மாடல்களிலும் பெற முடியும் என தெரிகின்றது. இதன் இந்திய வருகை பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche Launched Cross & Sport e-Cycles Globally; Here Is Prices & Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X