என்ன சொல்றீங்க Realme-ம் வாகனம் தயாரிக்க போகுதா? செல்போனைபோல வாகன தயாரிப்பிலும் iPhone, Xiaomiக்கு போட்டி!

பிரபல செல்போன் உற்பத்தி நிறுவனமான ரியல்மீ (Realme) மிக விரைவில் மின் வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்மார்ட்போன்

பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி (xiaomi) எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, மின்சார கார்களையும் நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது. இதற்கான பணியில் மிக தீவிரமாக களமிறங்கியிருப்பதாக மிக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இதேபோன்று, இன்னும் சில செல்போன் உற்பத்தி நிறுவனங்களும் மின் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றன. ஆப்பிள் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொடங்கி பல முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் மற்றுமொரு புகழ்வாய்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ (Realme), மிக விரைவில் வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம், வாகன உற்பத்தியின் கீழ் வர்த்தக பதிவைச் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலின்கீழ் இப்புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எனவே, ரியல்மீ நிறுவனம் மிக விரைவில் அதி வேகமாக வளர்ந்து வரும் மின் வாகன சந்தையின் தேவையை உணர்ந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கலாம் என யூகிக்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களும் நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கின்றன. அதேவேலையில், நிறுவனம் தரை, காற்று அல்லது நீர் இதில் எதில் வேண்டுமானாலும் பயணிக்கும் வாகன தயாரிப்பில் ஈடுபடலாம் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் நிறுவனத்தின் சார்பாக இதுவரை வெளியிடவில்லை. ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரும் புரட்சியைச் செய்து வரும் ரியல்மீ நிறுவனம் வாகனங்கள் கீழ் தனது புதிய வர்த்தக பதிவு செய்திருப்பது வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

தற்போது உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தை மிக விரைவில் களமிறக்கலாம் என கருதப்படுகின்றது. 2021 ஏப்ரல் நிலவரப்படி நிறுவனம் ஒரு மில்லியன் ஸ்மார்ட்போன் விற்பனை எனும் பெரும் சாதனையைச் சீனாவில் படைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகளவில் களமிறங்கி வெறும் 37 மாதங்களே ஆகின்ற நிலையில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய சந்தையாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Realme trademarked under the vehicles
Story first published: Monday, October 25, 2021, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X