குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

ரத்தன் இந்தியா நிறுவனம் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் சமீபத்தில் ரிவோல்ட் இண்டெலிகார்ப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் தன்னை ஈடுப்படுத்தி கொண்டது.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

ரிவோல்ட் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

இதில் திக்குமுக்காடி போன ரிவோல்ட் தற்போதைக்கு தற்காலிகமாக இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்க பைக்குகள் தயார் செய்யப்பட்ட பின்னரே இந்த முன்பதிவுகள் மீண்டும் துவங்கப்படும் என தெரிகிறது.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

50 சதவீத பங்குகளை கையகப்படுத்தியதால் ரிவோல்ட் போர்டின் தலைவராக ராஜிவ் ரத்தன் பொறுப்பேற்க உள்ளார். ஹரியானாவில் தொழிற்சாலையை கொண்டிருக்கும் ரிவோல்ட் டெல்லி, புனே, சென்னை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்தில் வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

ரிவோல்டின் இரு எலக்ட்ரிக் பைக்குகளின் ரேஞ்ச் 150கிமீ என்ற அளவில் உள்ளது. அதாவது இந்த பைக்குகளை முழுவதும் சார்ஜ் நிரப்பி கொண்டு அதிகப்பட்சமாக 150கிமீ வரையில் பயணிக்க முடியும். இவற்றின் அதிகப்பட்ச வேகம் 100கிமீ/நேரம் என்ற அளவில் உள்ளது.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் பொருத்தப்படும் 3.24kWh பேட்டரிக்கு தயாரிப்பு நிறுவனம் சுமார் 1.5 லட்ச கிமீ தூரத்திற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. ஒரு எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு இந்த அளவிற்கு வேறெந்த நிறுவனமும் உத்தரவாதத்தை வழங்குவதில்லை.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

இதனால் இந்த உத்தரவாதம் தான் ரிவோல்ட்டின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறது. இந்தியாவில் ரிவோல்ட் கிட்டத்தட்ட 35 நகரங்களுக்கு சந்தையை ரத்தன் இந்தியா நிறுவனத்தின் உதவியுடன் விரிவுப்படுத்த சமீபத்தில் நமது தளத்தில் கூட கூறியிருந்தோம்.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

இந்தியா மட்டுமின்றி சில தெற்காசிய நாட்டு சந்தைகளுக்கும் ரிவோல்ட் பிராண்டை கொண்டுசெல்ல ரத்தன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒரே தொகையில் வாங்குவது என்றால் ரூ.1.19 லட்சத்தில் சொந்தமாக்கி கொள்ளலாம்.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

அதுவே மாதத்தவணை முறையில் வாங்கினால் விலை இதனை காட்டிலும் சற்று அதிகமாகும். ஆர்வி300 பைக்கிற்கு முன்பதிவு தொகை மற்றும் மாதத்தவணை திட்டங்கள் முறையே ரூ.7,199 மற்றும் ரூ.3,174ல் இருந்து நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.

குவியும் வாடிக்கையாளர்கள்... ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளின் முன்பதிவு நிறுத்தம்!!

ஆர்வி400 பைக்கிற்கு ரூ.7,999 முன்பதிவு தொகையாகவும், ரூ.4,399 ஆரம்பக்கட்ட மாதத்தவணை திட்டமாகவும் இருந்தது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பெற்ற முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் ரிவோல்ட்டின் இந்த தயாரிப்புகளாகும்.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt India closed booking for its electric bikes due to huge demand.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X