மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ரிவோல்ட் நிறுவனம் அதன் முதல் டீலர்ஷிப் மையத்தினை மதுரையில் திறந்துள்ளது. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ரிவோல்ட் நாடு முழுவதும் அதன் டீலர்ஷிப் ஷோரூம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வகையில் தான் தற்போது மதுரையில் புதிய டீலர்ஷிப் மையத்தினை இந்த இவி பிராண்ட் திறந்து வைத்துள்ளது. மதுரையில் ரிவோல்ட் துவங்கும் முதல் டீலர்ஷிப் ஷோரூம் இதுவே.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

மொத்தமாக இந்தியாவில் இது 17வது ரிவோல்ட் சில்லறை விற்பனை நிலையமாகும். தமிழக அரசு இவி தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மானியங்களையும், சலுகைகளையும் வழங்கி வருவதால், நமது மாநிலத்தில் இவி பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு உதாரணமாகவே தற்போது இந்த புதிய மதுரை ரிவோல்ட் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

மதுரை மட்டுமின்றி, வருகிற டிச.8ஆம் தேதி கோயம்புத்தூரிலும் தனது புதிய டீலர்ஷிப் மையத்தினை நிறுவ ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது. வாகன விற்பனையில் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி முழுவதுமாக தள்ளுபடி, முதல் உற்பத்தி அலகுகளுக்கான மின்சார வரியில் இருந்து விலக்கு மற்றும் தொழிற்சாலை அமைக்க நில விலையில் 15- 20% வரை தள்ளுப்படி உள்ளிட்டவை தமிழக அரசு இவி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள மானியங்களாகும்.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

அதுமட்டுமின்றி, 2022ஆம் ஆண்டு வரை பேட்டரி இவி-களுக்கான மோட்டார் வாகன வரிகளில் இருந்து முழு விலக்கு உள்ளது. இத்தகைய விலக்குகள் முக்கிய வாகன உற்பத்தி மையங்கள் மற்றும் இடங்களில் இவி பூங்காக்களை உருவாக்குகிறது. தமிழ்நாடு, நாட்டிலேயே சிறந்த பைக் வழித்தடங்களை உருவாக்குவதாக ரிவோல்ட் தெரிவித்துள்ளது.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

மேலும், வாடிக்கையாளர்கள் இனி தங்கள் சொந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் மலைத்தொடர்கள் மற்றும் கடலோர காட்சிகளை கண்டுகளிக்க முடியும் எனவும் ரிவோல்ட் கூறுகிறது. ஏற்கனவே கூறியதுபோல் ரிவோல்ட் மோட்டார்ஸின் சந்தை விரிவாக்கம் தொடர்ச்சியாக நேர்மறையாக உள்ளது. இந்த புதிய மதுரை சில்லறை வணிக மையத்தின் மூலமாக தமிழகத்தில் இவி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

நாடு முழுவதும் இவி வாகனங்களுக்கான நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 2022ஆம் ஆண்டின் துவகத்தில் சண்டிகர், லக்னோ மற்றும் என்சிஆர் உட்பட இந்தியாவில் 50க்கும் அதிகமான புதிய நகரங்களில் நுழைவதன் மூலம், அதன் விற்பனை நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும், சில்லறை விற்பனையை மேலும் வலுப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

இந்த அனைத்து புதிய கடைகளும் முக்கிய நகரங்களில் உள்ள சில்லறை வணிக கூட்டாளர்களால் அமைக்கப்படும். எலக்ட்ரிக் பைக்குகளுக்கான தேவை அதிகரிப்பால் உற்சாகமடைந்திருக்கும் ரிவோல்ட், இந்த புதிய கடைகளை இந்தியாவிற்கு ஏற்ற நெகிழ்வான மற்றும் செலவு குறைந்த கண்டுப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இப்போது www.revoltmotors.com என்ற நிறுவனத்தின் இணையதளம் மூலம் தங்களின் சொந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்யலாம்.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

இந்த சில்லறை விற்பனை மையங்கள் விற்பனை நிலையங்களாக மட்டுமின்றி, ரிவோல்ட் இவி-களின் முக்கிய விபரங்களை ஆராய்ந்து அறிந்துக்கொள்ளவும் மையங்களாக திகழ்கின்றன. மேலும், ரிவோல்ட் இவி வடிவமைப்பு, சார்ஜிங் செயல்முறை மற்றும் சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவுவது உள்ளிட்டவை எப்படி நடக்கிறது என்பதை அறியவும் இந்த மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

ரிவோல்ட் பிராண்டில் குறிப்பாக, அதன் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து அபரிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த இ-பைக் ஒவ்வொரு முறையும் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டது. இதுதவிர, ரிவோல்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை மேம்படுத்தி, அதன் வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொடர்பு இல்லாத இணைப்பு அனுபவத்தை வழங்கி வருகிறது.

மதுரையில் ரிவோல்ட்டின் முதல் விற்பனை மையம்!! அடுத்தது கோவையில்... தமிழக சாலைகளை ஆக்கிரமிக்கவுள்ள இவி-கள்!

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக், 3 கிலோவாட்ஸ் மத்திய-டிரைவ் மோட்டாருடன் விற்பனை செய்யப்படுகிறது. இது 72 வோல்ட், 3.24 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பின் மூலம் இயக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 85கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கின் இருப்பிடம்/ ஜியோ ஃபென்சிங், தொடுதல் மூலமாக எழும்பக்கூடிய ஒலிகள், தேவைப்படும் பராமரிப்புகள், பேட்டரியின் சார்ஜ் நிலை மற்றும் பயண & கிமீ-களின் தரவு போன்றவற்றை மைரிவோல்ட் (MyRevolt) என்ற மொபைல்போன் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Motors strengthens retail footprint in Southern India; opens its first store in Madurai
Story first published: Monday, December 6, 2021, 21:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X