Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

ரிவோல்ட் (Revolt) நிறுவனம் அதன் ஆர்வி400 (RV 400) எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் பணிகளை மீண்டும் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

மின்சார ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் குறைவான விலையில் ரிவோல்ட் ஆர்வி 400 (Revolt RV 400) எலெக்ட்ரிக் பைக் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியிருக்கின்றது.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

இன்று (அக்டோபர் 21) முதல் புக்கிங் பணிகள் மீண்டும் நாட்டில் தொடங்கியிருக்கின்றன. எதிர்பார்த்ததை விட மிக அதிகளவில் புக்கிங் கிடைத்ததை அடுத்து மூன்றாவது முறையாக ரிவோல்ர்ட் ஆர்வி 400 பைக்கிற்கான புக்கிங் பணிகள் நாட்டில் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் பைக் தற்போது ரூ. 1.07 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் சில மின்சார ஸ்கூட்டர்களைக் காட்டிலும் குறைவான விலை இது என்பது குறிப்பிடத்தகுந்துத. ஃபேம்-2 திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழங்கும் மானியத்தின்கீழே இந்த குறைந்த பட்ச விலையில் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் முன்னதாக இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது புதிதாக 64 நகரங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக சென்னை, டெல்லி, மும்பை, புனே, அஹமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

ரிவோல்ட் ஆர்வி 400 பைக் புதிய நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதியதாக மிஸ்ட் கிரே தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், காஸ்மிக் கருப்பு மற்றும் ரிபெல் சிவப்பு ஆகிய நிறங்களிலும் ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கில் 72V, 3.24kWh லித்தியன் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ வேகம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 3கிலோவாட் மிட்-டிரைவ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

மேலே கூறப்பட்ட அதிக ரேஞ்ஜை ஈகோ மோடில் வைத்து இயக்கும்பேதே ரிவோல்ட் ஆர்வி 400 பைக் வழங்கும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்திற்காக இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் அப்சைடு டவுண் ஃபோர்க்கும், பின் பக்கத்தில், முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

இத்துடன், இன்னும் பல அம்சங்களுடன் ரிவோல்ட் ஆர்வி 400 எலெக்ட்ரிக் பைக் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, எலெக்ட்ரிக் பைக்கில் உள்ள சில முக்கிய அம்சங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரத்யேக 'மை-ரிவோல்ட்' செயலி வழங்கப்படுகின்றது. ஜியோ ஃபென்சிங், ஒலியை கட்டுப்படுத்தும் வசதி, எலெக்ட்ரிக் பைக் குறித்து அறியும் தொழில்நுட்பம், பேட்டரி நிலை, பயண வரலாறு ஆகியவற்றை இச்செயலி வாயிலாக பெற முடியும்.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

ரிவோல்ட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தியை முழுமையாக உள்ளூர் மயமாக்க திட்டமிட்டிருக்கின்றது. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து முழு உள்ளூர் உற்பத்தியாக ரிவோல்ட் ஆர்வி400 பைக் தயாரிக்கப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மா அண்மையில் வெளியிட்டார். ஆகையால், இந்த பைக் இன்னும் குறைவான விலையில் எதிர்காலத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Revolt RV400 இ-பைக்கிற்கு மீண்டும் புக்கிங் தொடக்கம்! இந்த முறை மிஸ் பண்ணீங்க, பல மாசங்கள் காத்திருக்கணும்!

தற்போது 70 சதவீத உள்ளூர் பாகங்கள் கொண்டு ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஹர்யானா மாநிலத்தின் மனேசர் பகுதியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆண்டுக்கு ஒரு லட்சம் யூனிட் என்ற உற்பத்தி திறனில் இந்த ஆலை செயல்பட்டு வருகின்றது. பிரபல திரை நடிகை அசினின் கணவரே ராகுல் ஷர்மா என்பது குறிப்பிடத்தகுந்தது. மைக்ரோமேக்ஸ் செல்போன் விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்ததை அடுத்து புதிய தொழிலாக ராகுல் ஷர்மா ரிவோல்ட் மோட்டார்ஸ் எனும் நிறுவனத்தின்கீழ் மின்சார வாகன உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

Most Read Articles
English summary
Revolt reopens rv 400 e bike booking in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X