போச்சு... விலைய ஏத்தி, வாரண்டிய குறைச்சிட்டாங்க... Revolt RV 400 இ-பைக்கின் புதிய விலை எவ்வளவு தெரியுமா?

ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், நிறுவனம் பைக்கின் பேட்டரிக்கு வழங்கி வந்த வாரண்டி காலத்தையும் குறைத்திருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

நாட்டின் அதிகம் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனங்களில் ரிவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மாடலும் ஒன்று. இந்திய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இருசக்கர வாகன மாடலாக மாறியிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலையையே ரிவோல்ட் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

ஃபர்ஸ்ட் ஸ்பாட் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி ரிவோல்ட், அதன் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கின் விலையை ரூ. 18 ஆயிரம் வரை உயர்த்தியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், மின்சார பைக்கின் விலை தற்போது ரூ. 1.26 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. ஃபேம்-2 திட்டத்தின்கீழ் கிடைக்கும் விலையாகும்.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

மும்பையில் இதே எலெக்ட்ரிக் ரூ. 1.26 லட்சத்திற்கு விற்பனையாகி வருகின்றது. இப்போது நாம் பார்த்த அனைத்து விலை விபரங்களும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். திடீர் உதிரிபாகங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பதாக ரிவோல்ட் நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதற்கும் வாகன கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதே காரணம் ஆகும். இந்த நிலையிலேயே ரிவோல்ட் நிறுவனம், அதிகரித்து வரும் விலை உயர்வைக் காரணம் காட்டி தனது அதிகம் விற்பனையாகும் மின்சார பைக்கின் விலையைத் திடீரென உயர்த்தியிருக்கின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

இதுமட்டுமின்றி நிறுவனம் தற்போது பேட்டரியின் வாரண்டி காலத்தைக் குறைத்திருக்கின்றது. நிறுவனம் அதன் ஆர்வி400 மின்சார பைக்கில் 3.24 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை பயன்படுத்தி வருகின்றது. இதற்கு 8 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இதனை தற்போது ஆறு ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர்கள் வாரண்டியாக குறைத்திருக்கின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

ரிவோல்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் இந்திய மின் வாகன பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், இந்நிறுவனத்தைத் தொடர்ந்து பிற நிறுவனங்களும் மின்சார வாகனங்களின் விலையை உயர்த்தி விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

விலை உயர்வானது இனி விற்பனையாகும் ஆர்வி400 பைக்கிற்கு மட்டுமல்ல ஏற்கனவே டெலிவரிக்காக காத்திருப்போருக்கும் பொருந்தும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆகையால், ஏற்கனவே புக் செய்த வாடிக்கையாளர்களும் கூடுதல் தொகையைக் கொடுத்து தங்களுக்கான ஆர்வி400 பைக்கை ஓட்டி செல்ல வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற்றிருக்கும் 72V, 3.24kWh லித்தியம் அயன் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கு முடியும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ வேகம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 3 கிலோவாட் மிட்-டிரைவ் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்களே வழங்கப்பட்டுள்ளன. இதில் ஈகோ மோடில் வைத்து இயக்கும்போதே உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெற முடியும். தொடர்ந்து, பிரத்யேகமாகக 'மை-ரிவோல்ட்' செயலி வழங்கப்படுகின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

இதைக் கொண்டு ஜியோ ஃபென்சிங், ஒலியை கட்டுப்படுத்தும் வசதி, எலெக்ட்ரிக் பைக் பற்றிய முக்கிய தகவல்கள், பேட்டரியின் சார்ஜ் அளவு, பயண வரலாறு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார பைக்காகவே ஆர்வி400 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

போச்சு... விலைய ஏத்திட்டாங்க... பல மடங்கு உயர்ந்த Revolt RV 400 இ-பைக்கின் விலை... புதிய விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார வாகனங்கள் சற்று அதிகம் விலைக் கொண்டதாக இருப்பதானால், நிறுவனம் மலிவு விலை இ-பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் ஆர்வி1 எனும் குறைந்த மாடலை உருவாக்கி வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதன் அறிமுகம் மிக விரைவிலேயே அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Revolt rv 400 price increased here is full details
Story first published: Monday, November 29, 2021, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X