சென்னைவாசிகளே... ரிவோல்ட் மின்சார பைக்கை வாங்கணுமா? அடுத்த சான்ஸ்... செய்திய முழுசா படிங்க!

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய மின்சார பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. உற்பத்தி எண்ணிக்கையின் அடிப்படையில் அவ்வப்போது புக்கிங்குகளை பெற்று டெலிவிரி கொடுத்து வருகிறது. சென்னை, ஹைதராபாத், ஆமதாபாத், புனே, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே ரிவோல்ட் மின்சார பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

இந்தநிலையில், தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளின் உற்பத்தியை ரிவோல்ட் நிறுவனம் அதிகரித்துள்ளது. இதனால், ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு முன்கூட்டியே டெலிவிரி கொடுக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், புதிய புக்கிங்குகளை பெறவும் முடிவு செய்துள்ளது.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

அந்த வகையில், நாளை மறுதினம் (ஜூன் 18) நண்பகல் 12 மணிக்கு ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளுக்கு சென்னை உள்ளிட்ட மேற்கண்ட 6 நகரங்களிலும் மீண்டும் புக்கிங்கை துவங்க இருப்பதாக ரிவோர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து கொள்ள முடியும். புக்கிங் துவங்குவதை நினைவூட்டல் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ரிவோல்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் தங்களது விபரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். நாளை மறுதினம் நினைவூட்டல் செய்தி கிடைக்கும். மேலும், இப்போது புக்கிங் செய்பவர்கள் இந்த ஆண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிவிரி பெற்றுவிடும் வாய்ப்பும் இருக்கிறது.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

ரிவோல்ட் ஆர்வி400 பைக்

புதிய ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக் ரூ.1.19 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த பைக்கிற்கு ரூ.7,999 செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த பைக்கில் 3.24kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. 3kW எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சமாக 156 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்கும். மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும்.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

ரிவோல்ட் ஆர்வி300 பைக்

ரிவோல்ட் ஆர்வி300 பைக் ரூ.94,999 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த பைக்கை ரூ.7,199 செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த பைக்கில் 2.7kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரியும், 1.5kW மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 65 கிமீ வேகம் வரை தொடும் திறன் கொண்டது.

சென்னையில் ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு மீண்டும் புக்கிங் துவங்குகிறது... நீங்க ரெடியா?

இந்த இரண்டு மாடல்களிலும் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. புளூடூத் இணைப்பு வசதியும், ஓடிஏ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அப்டேட் பெறும் வசதியும் உண்டு. ஜிபிஎஸ் நேவிகேஷன், வாகனத்தில் பழுது இருப்பது குறித்த தகவல், வாகனம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவதற்கான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட் #revolt
English summary
Revolt Intellicorp has announced the re-opening of bookings for its RV300 and RV400 electric motorcycles from June 18 at 12:00 p.m. Read in Tamil.
Story first published: Wednesday, June 16, 2021, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X