ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

இளைஞர்களின் ஃபேவரட் பைக்குகள் ஒன்றான ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளுக்கு வழக்கமான டயர்களுக்கு மாற்றாக சியட் டயர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த டயர்களால் என்ன பயன் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ராயல் என்பீல்டின் பெயரை தூக்கி பிடிக்கும் பைக் மாடல்களாக இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 என்ற 650 இரட்டை பைக்குகள் விளங்குகின்றன.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

இதற்கு காரணம், இவற்றின் மிகவும் குறைவான விலை என சொல்லலாம். இந்த இரு 650சிசி பைக்குகளிலும் பைரெல்லி பாண்டோம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு வரை வழங்கி வந்தது.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

பைரெல்லி டயர்கள் 650சிசி ராயல் என்பீல்டு பைக்குகளின் பழமையான தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இருப்பினும் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் 650 இரட்டை பைக்குகளின் டயர்களை சியட் நிறுவனத்திற்கு மாற்றியுள்ளது.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

இந்த மாற்றத்தை சில டீலர்களும், 650 இரட்டை பைக்குகளின் சில உரிமையாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்லேன் செய்திதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைரெல்லி நிறுவனத்திற்கு இந்தியாவில் தொழிற்சாலை இல்லை.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

இதனால் இந்தியாவில் இந்த நிறுவனம் டயர்களை இறக்குமதி செய்துதான் விற்பனை செய்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச ஏற்றுமதி இறக்குமதிகளில் தடைகள் ஏற்படவே ராயல் என்பீல்டு இவ்வாற்றான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

மேலும் இந்த மாற்றத்தால் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தயாரிப்பு செலவு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் பைரெல்லி மற்றும் சியட் டயர்களுக்கு இடையேயான விலைகள் பெரிய அளவில் வேறுபடுகின்றன. அதேநேரம் டயர்களின் அளவுகளும் மாற்றப்பட்டுள்ளதாக என்பது தெரியவில்லை.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

டயர்களின் மாற்றத்தால் பைக்கின் செயல்திறன் குறைந்துவிட்டது என்பதுபோல் எந்த புகாரும் இதுவரை வாடிக்கையாளர்களிடம் வெளிவந்ததுபோல் தெரியவில்லை. சமீபத்தில் ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை வாங்கிய அப்துல் ரஹீமான், சியட் டயர்கள் மென்மையானதாகவும், நன்கு பிடிப்பானதையும் வழங்குகின்றன.

ராயல்என்பீல்டு 650சிசி பைக்குகளில் வழங்கப்பட்ட வெளிநாட்டு டயர்கள் நீக்கம்!! மாற்றாக சியட் டயர்கள்..

பைரெல்லி டயர்களை போல் ஈரமான சாலைகளிலும் இவற்றின் க்ரிப் நன்றாகவே உள்ளது என தெரிவித்துள்ளார். சியட் டயர்கள் வேறு சில ராயல் என்பீல்டு பைக்குகளுக்கும் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விரைவில் 650 ட்வின்ஸ் ஃபேஸ்லிஃப்ட் பைக்குகள் அலாய் சக்கரங்கள் உடன் வழங்கப்படவுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield 650 Twins get CEAT Tyres instead of Pirelli Tyres
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X