புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் எத்தனை புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

நடப்பாண்டு நவம்பர் மாதத்திற்கான மாடல் வாரியான விற்பனை விபரங்களை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்துள்ளது. எனினும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒரு சில மாடல்கள் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையில் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

இதில், ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) முக்கியமானது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாதம் 8,733 புல்லட் 350 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் வெறும் 6,513 புல்லட் 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் 350 விற்பனையில் 34.09 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. வருடாந்திர ரீதியை போல், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் மாதாந்திர விற்பனையும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் வெறும் 5,822 புல்லட் 350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

ஆனால் இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில் 8,733 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் மாதாந்திர விற்பனை 50 சதவீதம் என்கிற அளவிற்கு அதிகரித்துள்ளது. வருடாந்திர விற்பனை வளர்ச்சியை காட்டிலும், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை புல்லட் 350 பைக் 2022ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'J' பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை புல்லட் 350 பைக் உருவாக்கப்படுகிறது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய இரண்டு பைக்குகளும் இதே 'J' பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கில் டிசைன் அம்சங்கள் பெரிதாக மாற்றம் செய்யப்படவுள்ளன.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

ஆனால் புல்லட் 350 பைக்கின் பாரம்பரியமான ரெட்ரோ லுக் தக்கவைக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில், 346 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.36 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

ஆனால் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கில், 349 சிசி, ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.21 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதே இன்ஜின்தான் புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய பைக்குகளில் வழங்கப்பட்டுள்ளது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

பொதுவாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் அதிர்வுகள் அதிகமாக இருக்கும். இது மிகப்பெரிய குறையாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய இன்ஜினில் அதிர்வுகள் மிகவும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளில் அதிர்வுகள் மிகவும் குறைவாக இருப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

அதே நேரத்தில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் தொடர்ந்து வழங்கப்படலாம். அதே நேரத்தில் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் முன் பகுதியில் டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம்.

புல்லட் புல்லட்தாங்க... சேல்ஸ் சும்மா தூள் கௌப்புது... ஒரே மாசத்துல இவ்ளோ பைக்குகள் விற்பனை ஆயிருக்கா?

அதே நேரத்தில் பின் பகுதியில் டிஸ்க் பிரேக் (ட்யூயல் சேனல் ஏபிஎஸ் உடன்) ஆப்ஷனலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ராயல் என்பீல்டு புல்லட் 350 அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகும். புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Most Read Articles
English summary
Royal enfield bullet 350 sales report november 2021
Story first published: Wednesday, December 29, 2021, 22:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X