ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

நடப்பு மே மாத நிலவரப்படி ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கிற்கான காத்திருப்பு காலம்குறித்த தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவலை இப்பதிவில் காணலாம் வாங்க.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகனங்களில் புல்லட் 350 மாடலும் ஒன்று. இந்த பைக்கிற்கு இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் காத்திருப்பு காலம் மாதக் கணக்கில் நிலவி வருகின்றது. அந்தவகையில், எந்தெந்த நகரத்தில் அதிக காத்திருப்பு காலம் நிலவுகின்றது என்பது குறித்த தகவலைதான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

நிறுவனத்தின் நல்ல டிமாண்ட் பெறும் இருசக்கர வாகனங்களில் ராயல் என்பீல்டு 350 மாடலும் ஒன்று. இதன் விளைவாக இப்பைக்கிற்கு சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் காத்திருப்பு காலம் எழுச்சியில் காணப்படுகின்றது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

முக்கியமாக தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக 45 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் கொல்கத்தா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

இதையடுத்தே சென்னை இருக்கின்றது. 40 முதல் 45 நாட்கள் வரையிலான காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி சென்னையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை நகரம் இருக்கின்றது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

இந்த நகரத்தில் ராயல் என்பீல்டு 350 புல்லட் பைக்கிற்கு 30 நாட்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகின்றது. தொடர்ந்து, 25 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் மும்பைக்கு அடுத்தபடியாக புனேவும், 20 நாட்கள் தொடங்கி 25 நாட்கள் வரையிலான காத்திருப்புகாலத்துடன் பெங்களூருவும் அந்தந்த இடங்களைப் பிடித்திருக்கின்றது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

ஆனால், ஹைதராபாத்தில் காத்திருப்பு காலமே இல்லாத நிலை நிலவுகின்றது. அதாவது, இந்த நகரத்தில் மட்டும்தான் புக் செய்த உடன் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் உரிமையாளர்களின் கைகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்த காத்திருப்பு காலமானது டீலர்களைப் பொருத்தும் மாறுபட்டு காணப்படுகின்றது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் கிக்-ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்விரு தேர்வுகளிலும் 346சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 19.1 பிஎச்பியை 5,250 ஆர்பிஎம்மிலும், 28 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். மேலும், புல்லட் 350 பைக் ரூ. 1,61,100 என்ற ஆன்-ரோடு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்ட் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராயல் என்பீல்டு 350 பைக்கை புக் செஞ்சா சென்னை வாசிகள் எத்தனை நாட்கள் காத்திருக்கணும் தெரியுமா?

நகரவாரியான காத்திருப்பு காலம்குறித்த பட்டியல்:

நகரங்கள் காத்திருப்பு காலம்
டெல்லி 2 மாதங்கள்
மும்பை 1 மாதம்
சென்னை 40 முதல் 45 நாட்கள்
கொல்கத்தா 45 நாட்கள்
பெங்களூரு 20 முதல் 25 நாட்கள்
புனே 25 நாட்கள்
ஹைதராபாத் காத்திருப்பு காலமே இல்லை

Source: bikedekho

Most Read Articles

English summary
Royal Enfield Bullet 350 Waiting Period In Indian Cities. Read In Tamil.
Story first published: Saturday, May 8, 2021, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X