500சிசி எஞ்சினுடன் மேம்படுத்தப்படும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ் புராஜெக்ட்!

பைக்குகளை வாங்கி கஸ்டமைஸ் செய்து கொள்வது சாதாரண பைக் பிரியர்களுக்கு பிடித்த விஷயம். அதே சமயம், தீவிர பைக் பிரியர்களுக்கு, எஞ்சின் செயல்திறனை அதிகப்படுத்தி ஓட்டுவதில் அலாதி கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் எஞ்சினின் செயல்திறனை கூட்டுவதற்கான திட்டத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் கையில் எடுத்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளை உருவாக்குவதிலும், எஞ்சின் ட்யூனிங் செய்வதிலும் கைதேர்ந்த பெங்களூரை சேர்ந்த என்எம்டபிள்யூ கராஜுடன் கைகோர்த்து இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் உள்ள எஞ்சினை 500சிசி திறனுக்கு மேம்படுத்தும் திட்டம் குறித்த வீடியோவை சில பாகங்களாக தயாரித்து வழங்க உள்ளோம். முதல் பாகத்தை கீழே பார்க்கலாம். அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.

பைக் எஞ்சினை மேம்படுத்துவதில் அலாதி ஆர்வம் காட்டுபவர்களுக்கு இது நிச்சயம் தீணி போடும் விஷயமாக இருக்கும். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் எஞ்சினில் எந்தெந்த பாகங்களை மாற்ற இருக்கிறோம். திறனை கூட்டுவதற்காக என்எம்டபிள்யூ நிறுவனத்தின்புதிதாக பயன்படுத்தப்படும் பாகங்கள் குறித்த விளக்கங்களுடன் இந்த முதல் பாகத்தை வழங்குகிறோம்.

500சிசி எஞ்சினுக்கு மாறும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

எங்களது இந்த திட்டம் குறித்த வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ-ட்யூப் பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நிச்சயம் இந்த வீடியோக்கள் பைக் எஞ்சினை மாடிஃபிகேஷன் செய்ய விரும்புவோருக்கு அதிக தகவல்களை வழங்குவதாக அமையும்.

Most Read Articles
English summary
Royal enfield himalayan 500cc project with nmw racing kit part 1 video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X