மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

ராயல் என்பில்டு நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான ஹண்டர் மோட்டார்சைக்கிள் மிக நெருக்கமாக சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

ஹண்டர் என்று அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டில் இருந்து அடுத்ததாக வரவிருக்கும் ரோட்ஸ்டர் பைக் இந்தியாவில் மீண்டும் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் தற்போது ஹண்டர் மோட்டார் சைக்கிளை மிக நெருக்கமாக பார்க்க நேர்ந்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350-ன் அதே இயக்கத்தில் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ரெட்ரோ-பாணி ரோட்ஸ்டர் மோட்டார் சைக்கிள், சற்று பின்புறமாக பொருத்தப்பட்ட ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி, அகலமான கைப்பிடிகள், குறுகிய ஸ்டப்பி எக்ஸாஸ்ட் மற்றும் கருப்பு நிற அலாய் சக்கரங்களுடன் ஸ்போர்ட்டியரான தோற்றத்தை கொண்டுள்ளது.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

இருப்பினும் உருமறைப்பு மற்றும் சில தற்காலிக பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், பைக் இன்னும் முன்மாதிரி நிலையில்தான் உள்ளதை அறிய முடிகிறது. இந்த தற்காலிக பாகங்களில் என்ஜின் பாதுகாப்பான், ஃபோர்க் பூட்ஸ், டிஸ்க் ப்ரேக்குகள், நீளமான ஒற்றை-துண்டு இருக்கை மற்றும் வட்ட வடிவிலான க்ரோம் ஹெட்லேம்ப் உள்ளிட்டவை அடங்கலாம்.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

இவற்றுடன் புதிய காம்பெக்ட் அனலாக் மற்றும் பகுதி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றையும் இந்த சோதனை ஹண்டர் பைக்கில் பார்க்க முடிகிறது. ஆனால் மீட்டியோர் 350 பைக்கின் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ப்ளூடூத் சார்ந்த பயணத்திற்கான நாவிகேஷன் பேட்-ஐ பார்க்க முடியவில்லை.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

ஒருவேளை விற்பனைக்கு வரும் ஹண்டரில் பொருத்தப்படலாம். ராயல் என்பீல்டு ஹண்டர் பைக் ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்படும் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். இதன் தயாரிப்பில் சில பாகங்கள் மீட்டியோர் 350 பைக்கில் இருந்து பகிரப்படவுள்ளன.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

ஆனால் எக்ஸாஸ்ட் குழாய், பெட்ரோல் டேங்க், இறுதி வால்பகுதி மற்றும் பின்பக்க மட் கார்டின் வடிவத்தில் இரண்டும் வித்தியாசப்படும். ஆனால் மீட்டியோர் 350 பைக்கில் பொருத்தப்படும் அதே 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் புதிய ஹண்டரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக நெருக்கமாக சாலையில் காட்சிதந்த ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... ஹண்டர்!! செம்ம ஸ்டைலு...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனை மீட்டியோரில் வெளிப்படுத்துகிறது. இதே அளவிலான ஆற்றலை தான் ஹண்டரிலும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Upcoming Royal Enfield Hunter Motorcycle Spied Up-Close
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X