ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளுக்கான, பொருட்களை எடுத்து செல்ல பயன்படும் கூடையை கூடுதல் ஆக்ஸஸரீயாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

சென்னையில் தொழிற்சாலைகளை கொண்டுள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளுக்கான 2021 மாடல்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்களாக இந்த பைக்குகளில் கவர்ச்சிகரமான நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மற்றப்படி பாகங்களின் வடிவங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாததால், இந்த 650சிசி மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

இருப்பினும் 2021 650 இரட்டை பைக்குகளுக்கு புதிய ஆக்ஸஸரீகளை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஆக்ஸஸரீகளில் இருக்கைகள், காற்று தடுப்பு கண்ணாடி உள்ளிட்ட பாகங்கள் அடங்குகின்றன.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

இவற்றுடன் ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம், அலாய் சக்கரங்கள் போன்றவையும் குறைந்தப்பட்சம் கூடுதல் ஆக்ஸஸரீகள் என்றாவது இந்த 2021 மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம், ஆனால் இதுவரையில் வழங்கப்படவில்லை.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

இந்த நிலையில் இந்த பைக்குகளுக்கான புதிய ஆக்ஸஸரீகளாக எதாவது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனவா என்று ஆராய்ந்து பார்த்ததில், முன்பு காலியாக இருந்த லக்கேஜ் பிரிவில் சாஃப்ட் பன்னியர்ஸ் எனப்படும் பொருட்களை எடுத்து செல்வதற்கு தேவையான துணி பை அதற்கு ஏற்ற கம்பிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

எளிதாக திறந்து மூடும் பூட்டுடன் வழங்கப்பட்டுள்ள இந்த பை, நீரில் இருந்து உள்ளே வைக்கப்படும் பொருட்களை பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துணி பையினை இரு பக்கங்களுக்கும் என ஜோடியாக பைக்குடன் வாங்கலாம்.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

இதில் 8.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ள ஒவ்வொரு பையிலும் அதிகப்பட்சமாக 3 கிலோ வரையிலான எடை கொண்ட பொருட்களை வைக்க முடியுமாம். இந்த ஜோடி பை ஆக்ஸஸரீயின் விலை ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரூ.4,000-ல் வலதுபக்க பையை மட்டும் கூட வாடிக்கையாளர் வாங்கலாம்.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

இந்த பைகளை பைக்கில் பொருத்துவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கம்பிகள் தேவை. இவற்றையும் வாடிக்கையாளர் ராயல் என்பீல்டின் இணையத்தளத்தின் மூலமாக வாங்க முடியும். 16மிமீ வளையாத இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கம்பிகள் பை பொருத்தப்படாவிடினும் பைக்கிற்கு ஸ்டைலான தோற்றத்தை வழங்குகின்றன.

ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளை இந்த ஆக்ஸஸரீகளுடனும் வாங்கலாமா!! ஆனா விலை தான் அதிகம்...

இந்த ஜோடி கம்பிகளின் விலை ரூ.1,600 ஆகவும், ஒற்றை கம்பியின் (வலதுபக்கம்) விலை ரூ.1,200 ஆகவும் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸஸரீகளை தொடர்ந்து அலாய் சக்கரங்களும், ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டமும் கூடுதல் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படும் என நம்புவோம்.

Most Read Articles

English summary
Royal Enfield Launches Luggage for Interceptor 650 & Continental GT 650.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X