ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?..

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல் ஒன்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பைக்குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் நமது நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. அந்தவகையில், நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனம் ஒன்று புதிதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

அது எந்த மாடல் என்ன விலை மற்றும் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் காண இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம். ராயல் என்பீல்டு, உலகின் மிக பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இது பாரம்பரிய தோற்றத்திலான இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

அந்தவகையில், நிறுவனம் உருவாக்கும் பாரம்பரியமிக்க தோற்றமுடைய மோட்டார்சைக்கிளில் கிளாசிக் 500 ட்ரிபியூட் கருப்பு பதிப்பு மாடலும் ஒன்று. இந்த பைக் மாடலையே ராயல் என்பீல்டு நிறுவனம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

ஆஸ்திரேலியாவிற்கு ஒட்டுமொத்தமாக 200 அலகுகளும், நியூசிலாந்து நாட்டிற்கு 40 யூனிட்டுகளும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே இன்னும் சில யூனிட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

2020ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் இந்த பைக் மிக கணிசமான அளவில் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டது. இணையத்தின் வாயிலாக ஆர்டர்கள் பெறப்பட்டு அவை விற்பனகை்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே வெளிநாடுகளுக்கும் இப்பைக் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் ராயல் என்பீல்டு 500 ட்ரிபியூட் கருப்பு பதிப்பு பிரத்யேகமாக தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்க நிற ஸ்டிக்கர்கள் பைக்கின் பல்வேறு பகுதிகளில் ஹைலைட்டராக ஒட்டப்பட்டுள்ளது. வீலிற்கு முழுவதுமாக தங்க நிறம் பூசப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

தொடர்ந்து எஞ்ஜினுக்கும் தனித்துவமான நிறத்தை ராயல் என்பீல்டு வழங்கியுள்ளது. அதாவது, வழக்கமாக நிறுவனம் அதன் பைக்குகளின் எஞ்ஜினுக்கு குரோம் பூச்சை மட்டுமே வழங்கும். ஆனால், தற்போது வெளிநாடுகளில் அறிமுகமாகியிருக்கும் பைக்கின் எஞ்ஜின்களுக்கு கருப்பு நிறம் பூசப்பட்டிருக்கின்றது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

எனவேதான் இப்பைக் கருப்பு பதிப்பு என அழைக்கப்படுகின்றது. இப்பைக்கில் 499சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கிளாசிக் 500 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27.6 பிஎஸ் மற்றும் 41.3 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் விற்பனைக்கு வந்தது தமிழக தயாரிப்பு... அங்கு இந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

ராயல் என்பீல்டு 500 ட்ரிபியூட் கருப்பு பதிப்பு பைக் ஆஸ்திரேலியாவில் இந்திய மதிப்பில் ரூ. 5.39 லட்சத்திற்கும், நியூசிலாந்து நாட்டில் ரூ. 5.05 லட்சத்திற்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது நம் நாட்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக விலை ஆகும்.

Most Read Articles

English summary
Royal Enfield Launches Classic 500 Tribute Black Edition Bike In New Zealand And Australia. Read In Tamil.
Story first published: Friday, June 18, 2021, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X