இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

120 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய வரிசை லிமிடெட்-எடிசன் ஹெல்மெட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ராயல் என்பீல்டு ஹெல்மெட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது 12 ஹெல்மெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தலா 120 யூனிட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த 12 ஹெல்மெட்களிலும் கடந்த 12 தசாப்தங்களில் ராயல் என்பீல்டு வெளியிட்டு பிரபலமாகிய போஸ்டர்களும், விளம்பரங்களும் டிசைன்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ராயல் என்பீல்டும் ஒன்றாகும். முதன்முதலாக 1901இல் இங்கிலாந்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போதும் வெற்றிக்கரமாக செயல்பட்டு வருவது உண்மையில் ஆச்சிரியமான விஷயமே. இந்த 12 ஹெல்மெட்கள் மொத்தமும் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

திங்கட்கிழமையில் ஒன்று, புதன்கிழமையில் ஒன்று என அடுத்த 6 வாரங்களுக்கு வாரத்திற்கு 2 ஹெல்மெட்களை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இந்த நாட்களில் சரியாக மதியம் 12 மணியளவில் ஹெல்மெட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுமாம். விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ராயல் என்பீல்டு அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் வாயிலாகவும் இவற்றை வாங்கலாம்.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

மேலும், ஒவ்வொரு ஹெல்மெட் மாடலும் 1இல் இருந்து 120 வரையிலான சீரியல் எண்ணுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 ராயல் என்பீல்டு ஹெல்மெட்கள் அனைத்தும் வெறும் கையால், பார்த்து பார்த்து பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. ஸ்டைலாக இருப்பது மட்டுமின்றி அணியும்போது பிரிமீயம் தரத்திலான உணர்வும் கிடைக்கும் என்கிறது, ராயல் என்பீல்டு.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

இதற்காக லெதர் ட்ரிம்கள் மற்றும் சன் விஸர் உள்ளிட்டவை இந்த ஹெல்மெட்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெல்மெட்களுக்கு ஐஎஸ்ஐ, டிஒடி மற்றும் இசிஇ உள்ளிட்டவை பொது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக சான்றளித்துள்ளன. இதுகுறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆடை வணிகம் பிரிவின் வட மற்றும் மேற்கு இந்தியா & உலகளாவிய முதன்மை அதிகாரி புனீத் சூட் கருத்து தெரிவிக்கையில், ஒரு ரைடர் வாங்கும் முதல் மற்றும் உண்மையிலேயே மிக முக்கியமான பயணத்திற்கான துணைக்கருவி ஹெல்மெட் என்பதை நாங்கள் புரிந்துக்கொள்கிறோம்.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

ஹெல்மெட் மிகவும் தனிப்பட்ட மற்றும் பெருமையுடன் அணியப்படுகிறது. எங்களது கடந்த 120 ஆண்டுகால வரலாற்றை பகிர்வதற்கு ஹெல்மெட்டை விட சிறந்த கேன்வாஸ் இருந்திருக்க முடியாது. இந்த லிமிடெட் எடிசன் ஹெல்மெட்கள் ரைடர்களின் பாதுகாப்பு, சவுகரியம் மற்றும் ஸ்டைல் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், இளைய தலைமுறையினர் மற்றும் ரைடர் அல்லாதவர்கள் இன்னும் பல வருடங்களுக்கு தங்கள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் கதைகளை உருவாக்க ஊக்குவிக்கும் என்றார்.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

இந்த புதிய ராயல் என்பீல்டு ஹெல்மெட்களில் பாதி முகத்தை மறைக்கும் ஹெல்மெட்களின் விலை ரூ.6,950 ஆகவும், முழு-முக ஹெல்மெட்களின் விலைகள் ரூ.8,450 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட்கள் மட்டுமின்றி ரைடர் ஜாக்கெட்கள், பூட்கள் என ஏகப்பட்ட ஆக்ஸஸரீகளையும் இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்கிறது.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

சென்னையில் கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமானவை உள்ளன. இருப்பினும் நம் தலைநகர் சென்னையை கார்கள் மட்டும் அதிகளவில் தயாரிக்கப்படும் நகரமாக குறிப்பிடுவது இல்லை. ஏனெனில் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக உலகளவில் பிரபலமான ராயல் என்பீல்டு நமது சென்னையில் தான் உள்ளது.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

இவ்வாறு சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக இத்தனை வருடங்களில் மாறிப்போனாலும், ஏற்கனவே கூறியதுபோல் ராயல் என்பீல்டு பிராண்ட் பிறந்தது என்னவோ இங்கிலாந்தில்தான். Enfield Manufacturing Co. Ltd என்ற பெயரில் ஆரம்பத்தில் இயங்கிவந்த இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் அப்போதைய முத்திரையாக, 'Made like a Gun' என்பது இருந்தது.

இங்கிலாந்து டூ சென்னை... ராயல் என்பீல்டின் 120 வருட பயணம்!! கொண்டாடும் வகையில் புதிய ஹெல்மெட்கள் அறிமுகம்

1893இல் இருந்து 1900 வரையில் சைக்கிள், குவாட்ரி சைக்கிள், ட்ரை சைக்கிள் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் என்பவற்றை தயாரித்து வந்தாலும், முதல் ராயல் என்பீல்டு பைக் ஆனது 2.5 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தும் ஆற்றல் உடன் 1901இல் வெளிவந்தது. அதன்பிறகு 1916ஆம் ஆண்டில் முதல் உலகப்போரின் போது துப்பாக்கிகளை எடுத்து செல்ல என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டன.

Most Read Articles

English summary
Royal Enfield launches hand-painted helmet range to celebrate 120th anniversary.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X